Asianet News TamilAsianet News Tamil

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆளுங்கட்சியை அதிர்ச்சி கொடுக்குமா பாமக?

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 

Vikravandi by election voting started tvk
Author
First Published Jul 10, 2024, 7:28 AM IST | Last Updated Jul 10, 2024, 7:49 AM IST

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விழு்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், பிரதான எதிர்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் ஆளுங்கட்சியான திமுக சார்பில்  அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. பாமக வேட்பாளர் அன்புமணிக்கு திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி!

Vikravandi by election voting started tvk

கடந்த 15 நாட்களாக திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். எப்படியாவது அதிமுக ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் அல்ல பாமக பல்வேறு வியூகங்களை வகுத்து வந்தது. பாமகவுக்கும், அதிமுகவுக்கும் எதிரி திமுக தான் உள்ளிட்ட பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினத்துடன் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு மாலை 6 மணிவரை  நடைபெறுகிறது. 276 வாக்குச்சாவடிகளில் 3 மிகவும் பதற்றமானவை, 42  பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? ஆம்ஸ்ட்ராங் கொலையை சுட்டிக்காட்டி திமுக அரசை விளாசும் பா.ரஞ்சித்!

Vikravandi by election voting started tvk

மேலும் பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வசதியாக 220 மத்திய துணை ரானுவப் படையினர் உட்பட 2,651 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios