விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. பாமக வேட்பாளர் அன்புமணிக்கு திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி!

PMK Candidate Anbumani : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள பாமக வேட்பாளர் அன்புமணி அவர்கள் உடல்நல குறைவால் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Vikravandi by election PMK candidate C anbumani hospitalized after health issues ans

விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், நாளை ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நேற்று ஜூலை 8ம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் புகழேந்தி. 

ஆனால் அண்மையில் நடந்து முடிந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதன் பிறகு சில கால ஓய்வில் இருந்த அவர், கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி விக்ரவாண்டி அருகே முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவருக்கு மீண்டும் உடல்நல கோளாறு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். 

கொலைக்களமாகும் தமிழகம்! - ஒரே வாரத்தில் 3 அரசியல்வாதிகள் படுகொலை! பாதுகாப்பில் கோட்டை விடுகிறதா தமிழ்நாடு!

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி காலமானார். இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நாளை ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஹோமியோபதி மருத்துவரான அபிநயா களம் காணவுள்ளார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், பாமக சார்பாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் சி. அன்புமணி போட்டியிடுகிறார்.  

இதற்காக கடந்த சில நாட்களாகவே தீவிர பிரச்சாரத்தில் இருந்த அன்புமணிக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், இப்பொது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.   

மின்வாரியம் சிறப்பாக செயல்பட ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்; அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios