Vikravandi Bypoll Result 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! திமுக தொடர்ந்து முன்னிலை! டெபாசிட் வாங்கியதா பாமக?

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 

Vikravandi by election results 2024 live update in tamil news

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகள் வழங்கினார். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், பிரதான எதிர்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் ஆளுங்கட்சியான திமுக சார்பில்  அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இதையும் படிங்க: Armstrong : 10 நாட்களாக நோட்டம்! ஒயின் ஷாப்பில் ரூட்! 45 நிமிடங்கள்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பகீர் தகவல்!

இந்நிலையில், ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 பேர் மட்டுமே வாக்களித்தனர். மொத்தம் 82.48 சதவீத வாக்குப்பதிவாகி இருந்தது. 

இதையும் படிங்க: Armstrong murder case: ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர்.! யார் இந்த அருள்-வெளியான புதிய தகவல்

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி 16வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,00,177 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 45,768 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  அபிநயா 8,226வாக்குகளை பெற்றுள்ளார். சுமார் பாமக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சுமார் 55,000 வாக்குகள் முன்னிலையில் உள்ள நிலையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில்  இருந்து வரும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகள் வழங்கினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios