Asianet News TamilAsianet News Tamil

Vijayakanth Funeral : விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது..! ஆயிரக்கணக்கான மக்கள் வழி நெடுக கண்ணீர்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், தீவு திடல் முதல் கோயம்பேடு வரை லட்சக்கணக்கான பொதுமக்கள் வழி நெடுக கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Vijayakanth funeral procession began with public tearful tributes KAK
Author
First Published Dec 29, 2023, 3:16 PM IST | Last Updated Dec 29, 2023, 3:16 PM IST

விஜயகாந்திற்கு பொதுமக்கள் அஞ்சலி

தமிழக அரசியலில் திமுக- அதிமுகவிற்கு மாற்றாக தனித்து நின்று சாதித்து காட்டியவர் நடிகர் விஜயகாந்த், திரையுலகத்தின் அனைவரும் சமம் தான் என்ன உணவு சாப்பிடுகிறேனோ அதே உணவு கடை நிலை ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டு செயல்படுத்தியும் காட்டியவர் விஜயகாந்த். அரசியலிலும், திரைத்துறையிலும் சாதித்து காட்டியவர் இன்று உலகத்தை விட்டு மறைந்து விட்டார். ஆனால் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நுரையீரல் பகுதியில் அதிகளவு சளி பாதிப்பு காரணமாக மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருந்த போதும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் நேற்று அதிகாலை உயிர் இழந்தார்.

இறுதி ஊர்வலம் தொடங்கியது

இதனையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுதிடலில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டது. விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து சற்று முன் தீவு திடலில் இருந்து விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது.. வழி நெடுக லட்சக்கணக்கான பொதுமக்கள் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இறுதி ஊர்வலம் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தை சென்றடையவுள்ளது. இதனை தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையோடு இறுதி சடங்கு நடைபெறுகிறது. இறுதி சடங்கில் ஆளுநர், முதல்வர், திரைத்துறையினர் மற்றும் விஜயகாந்தின் உறவினர்கள் என 200 பேருக்கு மட்டும் அனுமதிக்கப்படவுள்ளனர். 

இதையும் படியுங்கள்

கோயம்பேடு தேமுதிக அலுவலகம் எதிரே தொண்டர்கள் சாலை மறியல்; போலீஸ் தடியடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios