மன அழுத்தத்திற்கும், சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன்- விஜய் பரபரப்பு கடிதம்
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் மாணவிகளுக்கு ஆதரவளிக்கும் கடிதம் எழுதியுள்ளார். கல்வி வளாகங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டு மன வேதனை அடைவதாகவும், பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையை உலுக்கியுள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் வெளியே இருந்து வந்த நபர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது மாணவர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. எனவே கல்லூரிகளிலும் பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதாக அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. அண்ணா பல்கலை வளாகத்தில் போராட்டத்தையும் அரசியல் கட்சிகள் நடத்தியது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரன் என்பவன் கைது செய்ய்யப்பட்டுள்ளான். திமுக நிர்வாகி என ஒரு பக்கம் கூறி வரும் நிலையில், திமுகவோ இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது.
மாணவர்களுக்கு கட்டுப்பாடு
இதனையடுத்து கல்லூரி வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், மாணவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையோடு தான் கல்லூரிக்கு வர வேண்டும். வெளியில் இருந்து வரும் நபர்களை கண்டறியவேண்டும் என்பன தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை கல்லூரி நிர்வாகங்களுக்கு உயர்கல்வித்துறை அனுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும். நடிகருமான விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்
தவெக தலைவர் விஜய் கடிதம்
அன்புத் தங்கைகளே!
கல்வி வளாகம் முதற்கெண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்தும் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலகங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று. பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்டைம் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்க எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை. என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.
பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவாம்
எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணணாகவும், அரணாகவும், எனவே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவாம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என விஜய் அந்த கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.