viduthalai siruthaigal slapped against the federal government by eating cow meat
கிருஷ்ணகிரி
மாட்டு இறைச்சிக்கு தடை விதித்ததை கண்டித்து கிருஷ்ணகிரியில் மாட்டுக்கறி சாப்பிட்டு மோடி அரசிற்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு தடை விதித்ததை கண்டித்தும், தமிழக அரசு இந்த சட்டத்தை ஏற்க கூடாது என வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தினர்
கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.கனியமுதன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் முனிராவ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வம், செய்தித் தொடர்பாளர் வெங்கடேஷ், சட்டமன்றத் தொகுதிச் செயலாளர்கள் மன்னர்மன்னன் (பர்கூர்), தியாகு (கிருஷ்ணகிரி), ராமச்சந்திரன் (ஓசூர்), ராசப்பா (தளி), செம்பட்டி சிவா (வேப்பனப்பள்ளி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் மாயவன் வரவேற்றார்.
இதில் தலைமை நிலையச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மண்டல அமைப்புச் செயலாளர் நந்தன் ஆகியோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள எழுப்பியும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டும் மத்திய அரசிற்கு எதிரான தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
இதில் மாநில நிர்வாகிகள் அசோகன், தமிழ்மணி, திருமா முத்தமிழன், செந்தமிழ், குபேந்திரன், சக்திவேல், நூர்முகமது, மூர்த்தி, ஜெயலட்சுமி, சரவணன், சிற்றரசு உள்பட பலர் பங்கேற்றனார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நகரச் செயலாளர் சரவணன் நன்றித் தெரிவித்தார்.
