MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • அன்புமணிக்கு அல்வா கொடுத்த அமித் ஷா.. டெல்லி பாஜக போட்ட பகீர் அரசியல் கணக்கு..!

அன்புமணிக்கு அல்வா கொடுத்த அமித் ஷா.. டெல்லி பாஜக போட்ட பகீர் அரசியல் கணக்கு..!

பாமக அடையாளத்துக்காக போராடலாமா? இல்லை தாமரை சின்னத்தில் அதிகார அரசியலா? இந்த முடிவே அவருடைய அரசியல் எதிர்காலத்தையும், வன்னியர் வாக்கு அரசியலில் திசையையும் 2026 தேர்தலுக்கு முன் தீர்மானிக்கப் போகிறது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 09 2026, 05:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

தமிழக அரசியல் கூட்டணி கணக்குகளில் நண்பன் மாதிரி வந்து கடைசியில் நஷ்டம் செய்து போகிற கதையில் டெல்லி பாஜக பிண்ணிய அரசியல் கதைகள் புதிதல்ல. அதே வரிசையில் இப்போது அன்புமணி ராமதாஸ் விவகாரமும் பேசப்படுகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் பாஜக, அன்புமணிக்கு ஆதரவு மாதிரி பேசி வருகிறது. ‘ நீங்கதான் பாமக முகம். நீங்கதான் லீடர்’’ என நம்பிக்கை கொடுக்கிறது. ஆனால் உள்ளுக்குள் ஓடுகிற அரசியல் வேற லெவல் கணக்கு. இதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

பாமக என்றாலே அதிகம் அந்த கட்சி சின்னம் யாருக்கு கிடைக்கிறது என விவாதிக்கப்படுகிறது. அந்த சின்னம்தான் அடுத்த கட்ட அரசியலை முடிவு செய்யப்போகிறது. இந்த இடத்தில்தான் டெல்லி அரசியல் கையாண்டு விளையாடுவதாக சொல்லப்படுகிறது. அன்புமணி அணியை, ‘‘நாங்க உங்க பக்கம் தானே’’ என நம்ப வைத்து கடைசியில் பாமக சின்னம் டாக்டர் ராமதாஸ் பக்கம் போகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது மகன் கையில் அதிகாரம் வரக்கூடாது. நேரடி எதிர்ப்பு கிடையாது. ஆனால் சின்னமே கிடைக்காத நிலை வந்தால் அரசியல் தானாகவே கட்டுபாட்டுக்குள் வந்துவிடும்.

24
Image Credit : Google

இதற்கு பிறகு வரும் அடுத்த மூவ்தான் ரொம்பவே சுவாரசியம். சரி பாமக சின்னம் கிடைக்கவில்லை என்றால் என்ன? தாமரை இருக்கிறது என பாஜக தரப்பில் இருந்து ஒரு மென்மையான ஆலோசனை சொல்லப்பட்டு இருக்கிறது. அதாவது, அன்புமணி அணி பாமக பெயரில் இல்லை. தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் கூட்டணியில் இடம், சீட், ஆதரவு எல்லாம் கிடைக்கும் என்கிற ஒரு கணக்கை சொல்லி இருக்கிறது பாஜக. இதைப் பார்த்தால் உதவியாக தெரியும். ஆனால் அரசியலுக்கு கணக்கில இது அன்புமணியை பாமக அடையாளத்தில் இருந்தும் மெதுவாக விளக்கி, பாஜக அடையாளத்துக்குள் தள்ளும் தந்திரம் தான் என ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.

Related Articles

Related image1
24-ல் மதுரையில் சசிகலா புதிய கட்சி... சுக்கு நூறாக உடையும் அமமுக..! டிடி-வியின் காட்டுக் கதறல்..!
34
Image Credit : Asianet News

இந்த விளையாட்டில் பாஜகவுக்கு டபுள் லாபம். பாமக உள்ளேயே பிளவு தொடரும். இரண்டாவது அன்புமணி அணி தாமரை சின்னத்தில் வந்தால் பாமக என்ற தனி சுய அடையாளம் தளர்ந்து பாஜக அரசியல் விரிவாக்கம் நடக்கும். அன்புமணி அரசியல் ரீதியாக வளர்ந்தாலும் அது பாஜகவின் சாயலுக்குள்தான் இருக்கும். இதுதான் அல்வா கொடுத்து வேலையைக் காட்டுகிற டெல்லி ஸ்டைல் என அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அன்புமணி அன்னைக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. பாமக சின்னம் இல்லாமல் போனால் வன்னியர் வாக்கு முழுதாக கையில் வருமா? தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அந்த சமூக வாக்கு எந்த அளவுக்கு ஒத்துழைக்கும்? இந்த ரெண்டு கேள்விக்கும் தெளிவான பதில் இல்லாததுதான் இப்போது அன்புமணி அணியை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

44
Image Credit : Google

‘‘நம்மை ஆதரிக்கிற மாதிரி நடிச்சு. நம்ம அடையாளத்தையே எடுத்துடுறாங்களே’’னு உள்ளுக்குள் புலம்பி வருகிறார் அன்புமணி. மொத்தத்தில் இந்த அரசியல் விளையாட்டில் டெல்லி மிக நுணுக்கமாக நகர்த்துகிறது. அன்புமணிக்கு நேரடியாக எதிரி போல காட்டிக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் முழு அதிகாரமும் அவருக்கு போகாத மாதிரி செக் வைக்கிறது பாஜக. இதில் அன்புமணி எதை தேர்வு செய்யப் போகிறார்? பாமக அடையாளத்துக்காக போராடலாமா? இல்லை தாமரை சின்னத்தில் அதிகார அரசியலா? இந்த முடிவே அவருடைய அரசியல் எதிர்காலத்தையும், வன்னியர் வாக்கு அரசியலில் திசையையும் 2026 தேர்தலுக்கு முன் தீர்மானிக்கப் போகிறது.

About the Author

TR
Thiraviya raj
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
24-ல் மதுரையில் சசிகலா புதிய கட்சி... சுக்கு நூறாக உடையும் அமமுக..! டிடி-வியின் காட்டுக் கதறல்..!
Recommended image2
விசிக, காங்கிரஸுக்காக மெகா பிளானை இறக்கிய திமுக... குழு அமைக்காமலேயே ஸ்டாலின் அதிரடி..!
Recommended image3
திமுக கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்..! ‘கை’யை குதறும் சிறுத்தை..! அடங்க மறுக்கும் காங்கிரஸ்..
Related Stories
Recommended image1
24-ல் மதுரையில் சசிகலா புதிய கட்சி... சுக்கு நூறாக உடையும் அமமுக..! டிடி-வியின் காட்டுக் கதறல்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved