- Home
- Politics
- 24-ல் மதுரையில் சசிகலா புதிய கட்சி... சுக்கு நூறாக உடையும் அமமுக..! டிடி-வியின் காட்டுக் கதறல்..!
24-ல் மதுரையில் சசிகலா புதிய கட்சி... சுக்கு நூறாக உடையும் அமமுக..! டிடி-வியின் காட்டுக் கதறல்..!
புதிய கட்சியில் தங்களுக்கு எந்தெந்த தொகுதிகள் சாதகமாக இருக்கிறதோ, அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற அண்ணா நினைவு நாள் விழாவில் பத்திரிக்கையாளர்களை சசிகலா சந்தித்தபோது ‘‘தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ‘‘தேர்தல் களத்தில் இறங்குவேன்’’ என சசிகலா பதில் தெரிவித்தார். இதன் பின்னணியில் அவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகவும், தவெகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாகவும் தகவல் வெளியானது.
புதிய கட்சி தொடங்குவது குறித்து சசிகலா தனுக்கு ஆதரவாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். பிப்ரவரி 24ஆம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிறது. அன்று ராமநாதபுரத்தில் அல்லது மதுரையில் மாநாடு ஒன்றை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. உறுதியாக அந்த மாநாடு மதுரையில் நடப்பது உறுதி என்கிறார்கள். அன்றைய தினம் கட்சியை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அவரது சகோதரர் திவாகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. சசிகலாவின் கணவர் நடராஜனின் நண்பர்கள் சிலரும் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இதனையடுத்து அமமுக கட்சியின் ஏராளமான நிர்வாகிகளை தன் பக்கம் இருப்பதற்கான திரை மறைவு வேலைகளை செய்து வருகிறார் சசிகலா. பெங்களூருவில் சிறை தண்டனை அனுபவித்த போது டிடிவி.தினகரனுக்கும், சசிகலாவுக்கும் பனிப்போர் நடைபெற்றது. அமமுக கட்சிக்கு செலவு செய்ய வேண்டும் எனக் கூறி சசிகலாவிடம் இருந்து ஏராளமான பணத்தை பெற்றுக்கொண்ட டி.டி.வி.தினகரன் ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது, அதே சமயம் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமமுகவுக்கு ஆதரவு தரும்படி வேண்டுகோள் வைத்துள்ளார் டி.டி.வி.தினகரன். ஆனால் அதை நிராகரித்த சசிகலா ‘ ‘அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்குவதாகவும்’’ தெரிவித்தார்.
இதனால் சசிகலாவுக்கும், டிடிவி. தினகரனுக்கும் இடையே திரைமறைவு மோதல்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக குரல் கொடுத்து வந்த டிடிவி.தினகரன், தற்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகோர்த்துள்ளார். இதனால், அமமுகவில் உள்ள பல நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களோடு சேர்ந்து அதிமுகவிலிருந்து ஏராளமான நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்க சசிகலா, திரை மறைவில் திட்டம் தீட்டி வைத்திருக்கிறார். எனவே முறையில் 24 ஆம் தேதி சசிகலா புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவதுடன் ஏராளமான அமமுக தொண்டர்களையும், அதிமுக தொண்டர்களையும் தனது கட்சியில் சேர்க்க இருக்கிறார்.
எங்கு செல்வது என திக்கு தெரியாமல் தவித்து வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது பாஜக. ஒருவேளை மீண்டும் அதிமுகவில் இடம்பெறவில்லை என்றால் ஓ.பி.எஸ் சசிகலாவுடன் இணைந்து செயல்படுவார் என்று கூறப்படுகிறது. புதிய கட்சியில் தங்களுக்கு எந்தெந்த தொகுதிகள் சாதகமாக இருக்கிறதோ, அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அத்தோடு தவெக கூட்டணியுடன் சேர்ந்து செயல்படுவதற்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
