MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை! 9000 கோடி முதலீடு! 5,000 பேருக்கு வேலை ரெடி!

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை! 9000 கோடி முதலீடு! 5,000 பேருக்கு வேலை ரெடி!

டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார். 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்த திட்டத்தின் முதல் ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகனம் வெளியிடப்பட்டது.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 09 2026, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
Image Credit : Asianet News

5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலையின், முதல் அலகு 900 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உலகளாவிய மற்றும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறவேண்டும் என்ற முதலமைச்சர் இலட்சிய இலக்கினை விரைவில் எய்துவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

25
பெண்களுக்கான வேலைவாய்ப்பு
Image Credit : Asianet News

பெண்களுக்கான வேலைவாய்ப்பு

அதன் விளைவாக தமிழ்நாடு, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகவும், வாகனங்கள், மின்னணு, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள் உள்ளிட்ட பல்வகைப்பட்ட உற்பத்தித்துறைகளில் முன்னணி மாநிலமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களுக்கான வேலைவாய்ப்பு பெருமளவில் உருவாக்கப்பட்டதன் காரணமாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண்களில் 41 சதவிகித பங்களிப்பை தமிழ்நாடு கொண்டுள்ளது.

Related Articles

Related image1
நகை அடகு வைத்தவர்களுக்கு குட்நியூஸ்.. நகைக்கடன் தள்ளுபடி! வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!
Related image2
ஒரு கோடி ரூபாய் முதல் 40 லட்சம் வரை.. பண மழையில் அரசு ஊழியர்கள்! லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!
35
டாடா குழுமம்
Image Credit : Asianet News

டாடா குழுமம்

மோட்டார் வாகனங்கள், மின்னணுவியல், எஃகு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகளவில் டாடா குழுமம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அக்குழுமத்தின் துணை நிறுவனங்களான டிசிஎஸ், டைடன், டாடா பவர், டாடா எலெக்ட்ரானிக்ஸ், தாஜ் ஹோட்டல்கள் ஆகியவை ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்பட்டுவருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தற்போது, டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனம் அதிநவீன மின்வாகன உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

45
அதிநவீன மின்வாகன உற்பத்தி ஆலை திறப்புs
Image Credit : Asianet News

அதிநவீன மின்வாகன உற்பத்தி ஆலை திறப்புs

டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனம், 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் வாகன உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஆலையின் முதல் அலகு நிறுவும் பணிகள் 16 மாதங்களில் விரைந்து முடிக்கப்பட்டு, இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

55
கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்
Image Credit : Asianet News

கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்

இது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். உலகப் புகழ் பெற்ற ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சொகுசு வாகனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ள இவ்வாலையின் முதலாவது வாகனம் இன்று வெளியிடப்பட்டது.

டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலை திறப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், உற்பத்தியை ஆலையை திறந்து வைத்து, பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, இந்த ஆலையின் முதலாவது ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சொகுசு வாகனத்தை இயக்கியதுடன், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாடா கார்கள்
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதிய மஹிந்திரா XUV 7XO: புக் பண்ண போறீங்களா..? இதை மட்டும் தெரிஞ்சிக்கோங்க..
Recommended image2
பிப்ரவரியில் பிச்சு ஊதறும் ஆஃபர்.. ரூ.40,000 வரை தள்ளுபடி.. Maruti Suzuki Wagon R அதிரடி!
Recommended image3
"தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பாதுகாப்பான பயணம் – Bharat Taxi உடன்!" தமிழகத்தில் எப்போது தெரியுமா..?
Related Stories
Recommended image1
நகை அடகு வைத்தவர்களுக்கு குட்நியூஸ்.. நகைக்கடன் தள்ளுபடி! வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!
Recommended image2
ஒரு கோடி ரூபாய் முதல் 40 லட்சம் வரை.. பண மழையில் அரசு ஊழியர்கள்! லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved