- Home
- Tamil Nadu News
- நகை அடகு வைத்தவர்களுக்கு குட்நியூஸ்.. நகைக்கடன் தள்ளுபடி! வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!
நகை அடகு வைத்தவர்களுக்கு குட்நியூஸ்.. நகைக்கடன் தள்ளுபடி! வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!
Gold Loan Waiver:தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த திமுக அரசின் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி. கடன் தள்ளுபடி அறிவிப்புகளை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

உச்சத்தில் தங்கம் விலை
தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டி வரலாறு படைத்துள்ளது. அதாவது ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகைப்பிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு பணம் தேவைபட்டால் நகைகளை அடகு வைப்பது மக்களின் முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது.
கூட்டுறவு வங்கியை நாடும் பொதுமக்கள்
அதாவது அடகு கடை மற்றும் வங்கிகளில் அதிக வட்டி என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கூட்டுறவு வங்கியை அதிகளவில் நாடுகின்றனர். இதற்கான காரணம் கூட்டுறவு வங்கியில் வைக்கப்படும் நகைகடன் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையிலும் வைக்கின்றனர்.
ஐந்து சவரன் தள்ளுபடி
இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் வரையிலான தங்க நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். இந்த வாக்குறுதியானது குறிப்பாக ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு உதவும் வகையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 2021 செப்டம்பர் 13 அன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 31 மார்ச் 2021 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட ஐந்து சவரன் அல்லது அதற்கு குறைவான தங்க நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.
நகைக் கடன்கள் தள்ளுபடி
தமிழக அரசு அறிவித்த இந்த உத்தரவால் சுமார் 13.12 லட்சம் பேர் பயனடைந்தனர், மொத்தம் 4,904 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் தள்ளுபடிச் சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டது. இதே போல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2,755.99 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன, இதனால் 1,17,617 குழுக்கள் பயனடைந்தன.
நெருங்கும் தேர்தலால் எதிர்பார்ப்பில் மக்கள்
தமிழகத்தில் இன்னும் 2 மாசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்கான கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். இதற்கு போட்டியாக ஆளும் கட்சியான திமுகவும் அனைவரும் வியக்கும் வகையில் பல்வேறு தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடத் தயாராகி வருகிறது.

