குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக தனது சொந்த ஊருக்கு வந்த சிபி ராதாகிருஷ்ணன் தனது காலணியை அகற்றிவிட்டு பொதுமக்களை சந்தித்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிபி ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணனின் பதவியேற்புவிழா டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அவர் தமிழகம் வந்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றார். இதனிடையே மதுரையில் தங்கியிருந்த குடியரசு துணைத்தலைவரை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் இணைந்து நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக திருப்பூரில் தனது சொந்த பகுதிக்கு வந்த சிபி ராதாகிருஷ்ணனை அப்பகுதி மக்கள் பாசத்தோடு வரவேற்றனர். அங்கு தன் வருகைக்காகக் காத்திருந்த மக்களை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட ராதாகிருஷ்ணன் தனது காலணிகளை அகற்றிவிட்டு அவர்கள் அருகில் சென்று வாழ்த்துகளை பெற்றுக் கொண்டனர்.

காலணியை கலற்றிவிட்டு வெறும் கால்களோடு ராதாகிருஷ்ணன் தங்களை நோக்கி வந்ததை கவனித்த மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.