குவைத் தீ விபத்தில்  தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்தவர்கள்  உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது  என தெரிவித்துள்ள வேல்முருகன் உயிரிழந்த சகோதரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

குவைத் தீ விபத்து- 40 பேர் பலி

குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 40பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்தவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. குடும்ப வறுமையை போக்க பொருளாதாரம் தேடி, தமிழ்நாடு, கேரளா என இந்தியாவைச் சேர்ந்த பலர், குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

குவைத் தீ விபத்து.. தமிழர்களுக்கு பாதிப்பா.? விவரங்களை தெரிந்து கொள்ள தொலைபேசி எண்-ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

குடும்ப வறுமைக்காக வெளிநாட்டில் வேலை

இச்சூழலில், அந்நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், 2 தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்தவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெற்றெடுத்த பிள்ளையை, கணவனை இழந்து ஆற்றோணா வேதனையில் துடிக்கும், தமிழ் சகோதரர்களின் பெற்றோருக்கும், உறவுகளுக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன். குடும்ப வறுமையை போக்கவும், வாழ்வாதாரத்துக்கு பெரும் நம்பிக்கையாக இருந்த, தமிழர், கேரளா சகோதரர்களை இழந்துவிட்டு பெருந்துயரில் சிக்கியிருக்கும் அவரது பெற்றோர், உறவினர்கள், உயிரிழந்த சகோதரர்களின் உடலை இறுதியாக பார்ப்பதற்கு ஏங்கித் தவிப்பதும், 

ஒரு கோடி ரூபாய் இழப்பு வழங்கிடுக

வெளிநாட்டில் இருந்து உடலைக் கொண்டு வரப் போராடியும் வருகின்றனர். எனவே, உயிரிழந்த தமிழர், கேரளா சகோதரர்களின் உடலை, அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவர்களை இழந்து நிற்கும், குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கவும், ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும், தீ விபத்தில் காயமடைந்த தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்தவர்கள் என அனைவருக்கும், உரிய சிகிச்சை மேற்கொள்ளவும், அவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கவும் இந்தியா ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.