கூடா நட்பால் விபரீதம்... நர்சை கடத்திச் சென்று கொலை செய்த காதலன்!
வேலூர் ஏரியில் செவிலியர் அனிதா இறந்து கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதல் விவகாரத்தால் அனிதா கொலை செய்யப்பட்டது தெரிவந்துள்ளது.
வேலூர் ஏரியில் செவிலியர் அனிதா இறந்து கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதல் விவகாரத்தால் அனிதா கொலை செய்யப்பட்டது தெரிவந்துள்ளது.
வேலூர் கீழ்மொணவூர் திருமால் நகர் டேங்க் தெருவை சேர்ந்தவர் கதிரேசன். இவரின் மனைவி அனிதா (28), சி.எம்.சி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அனிதா வீட்டை வீட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவர் மாயமானார். வேலூர் அருகே உள்ள சதுப்பேரி ஏரியில் அனிதா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அனிதாவின் கணவர் கதிரேசன் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் அஜித்குமார் தனது மனைவியை கடத்தி கொலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அண்மையில், அஜீத்குமார் என்ற இளைஞருடன் அனிதா நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. தீபாவளி அன்று அனிதா, அஜித்குமாருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை கண்டுபிடித்த கதிரேசன் அனிதாவிடம் இருந்து செல்போனை பறித்தார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பிறகு கதிரேசன் ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டார். அணிதாவின் கணவர் கதிரேசன் வீட்டில் இல்லாததை அறிந்த அஜித்குமார் அனிதாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். கணவருக்கு விவகாரம் தெரிந்து விட்டதால் கள்ளக்காதலை கைவிடுமாறு அனிதா கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
மேலும், தனியாக பேச வேண்டும் என்று கூறி அனிதாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் வீடு திரும்பாத நிலையில் அனிதாவை, அஜீத்குமார் கொலை செய்து ஏரியில் வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். தலைமறைவான அஜீத்குமாரை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.