திருச்சி மாவட்டம், மணப்பாறை நடுக்காட்டுபட்டியில், சுர்ஜித் என்ற, 2 வயது ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அதிகாரிகள் குழுவினர், குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்

கிட்டத்தட்ட 62 மணி. நேரத்துக்கு மேலாக சிறுவனை மீட்கும் பணி தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து சுர்ஜித்துக்காக நாமு முழுவதும் பிரார்த்தனை நடைபெற்று வருகிற்து.

கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் என அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்  வேலுார் மாவட்டம், ஏலகிரி மலைக் கிராம மக்கள், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை. மேலும், குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என, கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.

வேலுார் மாவட்டம், தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், சுர்ஜித்தை மீட்க, முரளிதர சுவாமிகள் தலைமையில் சிறப்பு ஹோமம் நடந்தது. 

இதே போல் தீபாவளியையொட்டி, வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு, நேற்று மதிய உணவுடன், இனிப்பு வழங்கப்பட்டது. ஆனால், சுர்ஜித்துக்காக, தங்களுக்கு வழங்கிய இனிப்பை, கைதிகள் சாப்பிடாமல் தவிர்த்தனர். தொடர்ந்து அவர்கள் சுர்ஜித்துக்காக கைதிகள் பிரார்த்தனை செய்தனர்