வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.65 லட்சத்தை ஆட்டயை போட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூரில் புகழ்பெற்ற சி.எம்.சி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சி.எம்.சி மருத்துவமனையில், வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்யும் கும்பல் அதிகளவில் இருந்து வருகிறது. இவர்களில் பலர் பணத்தை இழந்து காவல் நிலையத்தில் புகார் செய்து வருவது தொடர் கதையாக உள்ளது.

 

இந்நிலையில், சி.எம்.சி மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 85-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 62 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளார். தற்போது அவர் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி உள்ளார். இது தொடர்பாக வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த ஜான் கென்னடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஏற்கனவே 8 பேரிடம் சி.எம்.சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.14 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய உதயகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.