வேலூரில் மகன் கண் முன்னே விபத்தில் சிக்கி தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூரில் மகன் கண் முன்னே விபத்தில் சிக்கி தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், தனது மகன் ஆதித்யனுடன், இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் சென்றுக் கொண்டிருந்தார். இப்போது பேருந்து நிலையம் அருகே லாரி ஒன்று கடந்து சென்ற போது திடீரென ஆதித்யனின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறியது.

இதில் கீழே விழுந்த ராஜேஸ்வரி மீது லாரியின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுபுறம் விழுந்த ஆதித்யன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்டபாக போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் திருப்பத்தூரில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் லஞ்சம் வாங்கிக் கொண்டு தடையை மீறி கனரக வாகனங்களை உள்ளே விட்டதால், வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்