vehicles checking in150 places for 15 days in chennai
சென்னையில் 15 நாட்களுக்கு 150 இடங்களில் வாகன சோதனை..! யாரெல்லாம் மாட்டப்போறாங்க தெரியுமா..?
சென்னையில் தொடர்ந்து 15 நாட்களுக்கு வாகன சோதனை நடைப்பெறும் என காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்
தொடர் வழிப்பறி, பைக்ரேஸ் மற்றும் கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர் காணவல் துறையினர்
அதில் முதற்கட்டமாக, தொடர்ந்து 4 வது நாளாக சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, அடையார், அண்ணா நகர், மெரினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையினை தீவிரமாக நடத்தியுள்ளனர்
இதன் மூலம் சந்தேகப்படும்படி உள்ள நபர்களை எளிதில் அடையாளம் காண முடியும். துணை ஆணையர்கள் தலைமையில் நடக்கும் வாகன சோதனையை பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கும் போது, சென்னையில் 15 நாட்களுக்கு 150 இடங்களில் வாகன சோதனை நடைப்பெறும். நான்காவது நாளாக நடைபெறும் இந்த சோதனை மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டு உள்ளது..எனவே இந்த சோதனை 15 நாட்களுக்கு தொடரும் என தெரிவித்து உள்ளார்.
