- Home
- Tamil Nadu News
- அடிதூள்.. நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை..! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம்?
அடிதூள்.. நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை..! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம்?
Holiday: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும்.

பொது விடுமுறையை தவிர்த்து உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் புதிய ஆண்டு பிறந்துள்ள நிலையில் எந்தெந்த மாதங்களில் பொதுவிடுமுறை என்பதை பள்ளி மாணவர்கள் எப்போதே காலாண்டரை புரட்டி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பொது விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் மற்றும் தியாகிகளின் நினைவு தினம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம்.
நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம்
இந்நிலையில் உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று ஸ்ரீநடராஜர் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன விழாக்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
உள்ளூர் விடுமுறை
இந்நிலையில், விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்களின் சிவ சிவா கோஷம் விண்ணை பிளந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தருவார்கள் என்பதால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலங்கள் செயல்படும்
இந்த விடுமுறையானது கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு வழக்கம்போல இயங்கும். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 14 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

