- Home
- Tamil Nadu News
- மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் மழை! உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. நாள் குறித்த வானிலை மையம்
மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் மழை! உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. நாள் குறித்த வானிலை மையம்
தமிழகத்தில் இரு வளிமண்டல சுழற்சிகளால் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஜனவரி 6-ம் தேதி வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை
தென்மேற்கு பருவ மழையை விட தமிழகத்தில் அதிக கனமழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகளின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் வரும் நாட்களில் இதே போன்று மழை பெய்தால் நிலைமை மோசமாகிவிடும் என பொதுமக்கள் அஞ்சு நடுங்கினர்.
டிட்வா புயல்
இந்நிலையில் நம்பவர் மாதத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாமல் வறண்ட வானிலை நிலவியது. டிசம்பர் முதல் வாரத்தில் டிட்வா புயல் டெல்டா மற்றும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. அதன் பிறகு போதிய மழை பெய்யவில்லை.
கடுமையான பனிபொழிவு
ஆனால் கடுமையான பனிபொழிவு நிலவி வந்தது. இதன் காரணமாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் அதிகாலை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எறிய விட்டவாரே சென்றனர்.
தென்காசியில் கனமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 3% சதவீதம் குறைவாக பெய்துள்ளது வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் லட்சதீவு- குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் கடனாநதி அணைப் பகுதியில் 23 செ.மீ., நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் 21.5 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் ஜனவரி 6-ம் தேதியை ஒட்டி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்பு குறைவு எனவும் புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் பனிபொழிவு குறைந்து மழையை எதிர்பார்க்கலாம்.

