30 ஆண்டுகள் சிறை.. வீரப்பனின் கடைசி கூட்டாளியான மாதையன் பெங்களூரில் உயிரிழப்பு!

வீரப்பனின் முக்கிய கூட்டாளியான மீசக்கார மாதையன் 1993ம் ஆண்டு வீரப்பன் குழுவில் இருந்து தப்பித்து கர்நாடக போலீசில் சரணடைந்ததார். மீசக்கார மாதையன் மீது 4 தடா வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

veerappan last partner mathaiyan died in Bangalore

30 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வரும் வீரப்பனின் கூட்டாளியான மீசக்கார மாதையன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து சந்தனக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் வீரப்பன். கடத்தல் மட்டுமின்றி, யானை தந்தம் கடத்தல், ஆள் கடத்தல் என பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததார். பல ஆண்டுகளாக வீரப்பன் தமிழக, கர்நாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை 108 நாள்கள் கடத்தி வைத்து  நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். 

veerappan last partner mathaiyan died in Bangalore

இவர் 184 பேரை கொன்றதற்காகவும், தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார். இவர் 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்தடுத்து அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், வீரப்பனின் முக்கிய கூட்டாளியான மீசக்கார மாதையன் 1993ம் ஆண்டு வீரப்பன் குழுவில் இருந்து தப்பித்து கர்நாடக போலீசில் சரணடைந்ததார். மீசக்கார மாதையன் மீது 4 தடா வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  பின்னர், தூக்கு தண்டனையை குறைக்க குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்கப்பட்டது. ஆனால், அம்மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடிய போது 4 பேருக்கும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

veerappan last partner mathaiyan died in Bangalore

இதையடுத்து மைசூர் சிறையில் இருந்து 4 பேரும் இருந்து வந்த நிலையில் கடந்த 2018ல் சைமனும், 2022ல் பிலவேந்திரனும் உயிரிழந்தனர். இந்நிலையில், மைசூர் சிறையில் 30 ஆண்டுகளாக இருந்து வந்த மீசக்கார மாதையனுக்கு உடல்நிலை பாதிக்கபட்டதை அடுத்து மைசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை மீசக்கார மாதையன் உயிரிழந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios