Asianet News TamilAsianet News Tamil

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பின்னால்' சீனா' இருக்கு.. மீண்டும் பரபரப்பு.! சர்ச்சையை கிளப்பிய வேதாந்தா தலைவர்

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால் , தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர்.

Vedanta President Anil Agarwal has said that China is behind the Sterlite protest
Author
First Published Aug 6, 2022, 11:57 PM IST

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கேட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

Vedanta President Anil Agarwal has said that China is behind the Sterlite protest

கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்தபோது, நாடு முழுவதும் பரவலாக ஆக்சிஜன் நெருக்கடி ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மையத்தில் ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்வதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 27 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.   அதன் பிறகு, ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இதற்கிடையே ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதிக்காததால், ஆலையை விற்கப்போவதாக வேதாந்தா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதனையடுத்து  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் சமீபத்தில் தகவல் அளித்துள்ளார்.

Vedanta President Anil Agarwal has said that China is behind the Sterlite protest

மேலும் பேசிய அவர், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு பின்னணியில் சீனா இருந்ததாகவும், போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு சீனா நிதியுதவி அளித்ததாக அனில் அகர்வாஸ் குற்றம் சாட்டியுள்ளார். காப்பர் ஒயர்களை இந்தியா தயாரிக்க உலகம் விரும்பவில்லை என்று அனில் அகர்வால் கூறியுள்ளார்.  இவரது பேச்சு மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..அதிமுக ஆபீசுக்கு வரும் சசிகலா.. அடுத்து என்ன நடக்குமோ? பதற்றத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் !

Follow Us:
Download App:
  • android
  • ios