அதிமுக ஆபீசுக்கு வரும் சசிகலா.. அடுத்து என்ன நடக்குமோ? பதற்றத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் !
அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். நீண்ட நாட்களாக தொண்டர்களை சந்திக்காமல், சுற்றுப்பயணம், ஆன்மீக பயணம் மேற்கொண்டு இருந்த சசிகலா இன்று தன்னுடைய இல்லத்திற்கு வந்திருந்த தொண்டர்களை சந்தித்து பேசினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சசிகலாவை சந்தித்து புகைப்படம் எடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த நரசிம்மன், ‘அதிமுகவில் சிலர் சுயலாபத்திற்காக செயல்பட்டு வருகின்றனர். இது சில காலம் மட்டுமே நீடிக்கும். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிந்த பிறகு உரிய நேரத்தில் உரிய காலத்தில் வி.கே சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..“பிரதமர் சொல்லிவிட்டார்.. வேறு வழியில்லை என்று செய்கிறார்கள்” முதல்வர் ஸ்டாலினை சீண்டிய வானதி !
அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்குநாள் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சசிகலா அதிமுக அலுவலகத்திற்கு வருவார் என நரசிம்மன் பேசி இருப்பது அதிமுகவினரிடையே மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது.
இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பதவியேற்ற நாளில், அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பு அத்துமீறி நுழைந்து பொருட்களை திருடிச் சென்றதாக இபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சசிகலா அதிமுக அலுவலகத்துக்கு வந்தால், என்னென்ன பிரச்சனைகள் நடக்குமோ என்று விரைவில் பார்க்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !