“பிரதமர் சொல்லிவிட்டார்.. வேறு வழியில்லை என்று செய்கிறார்கள்” முதல்வர் ஸ்டாலினை சீண்டிய வானதி !
ஏதோ பிரதமர் நாடு முழுக்க சொல்லிவிட்டார் என்பதற்காக வேறு வழியில்லாமல் செய்வது போல பெயரளவில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பாஜக மகளிரணி தேசிய செயலா் வானதி சீனிவாசன் கூறினாா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தனியாா் கல்லூரியில் பாஜக மகளிரணி பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசிய செயலா் வானதி சீனிவாசன் நாட்டினுடைய தேசியக்கொடி என்பது அனைவருக்கும் பொதுவானது. இங்கு தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய கொடியை மாநில சட்டப்பேரவையில் ஏற்றுவதற்கு நாங்கள் உரிமை பெற்று இருக்கிறோம் என்று சொல்லும் அதே நேரத்தில் பெருமையாக தேசிய கொடியின் படத்தை டிஸ்ப்ளே பிக்சராக வைப்பதில் அவர்களுக்கு என்ன தயக்கம் இருக்கிறது.
ஏன் என்று சொன்னால் அடிப்படையிலேயே அவர்களுக்கு தேசிய கொடி மீதோ தேச ஒற்றுமை மீதோ ஒரு முழுமையான நம்பிக்கை இல்லாத தன்மையை நாங்கள் பார்த்து இருக்கிறோம், அதை அவர்களுக்கு சுட்டிக்காட்டியும் இருக்கிறோம். தமிழகம் சுதந்திர போராட்டத்தில் அதிகமாக பங்கு வகித்த மாநிலம் நமது தென்கோடி தமிழகத்தில் இருந்து கூட நமது நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு அதிகமாக பங்களித்தவர்கள் தமிழகத்திலே உண்டு.
மேலும் செய்திகளுக்கு..“ஆப்ரேஷன் தாமரை 2.0 - தமிழகம் வருகிறார் அமித்ஷா.." அலெர்ட் ஆன திமுக !
தமிழகத்தினுடைய முதல்வர் தமிழகம் போராட்டத்தில் இவ்வள்வு பங்கு வகித்திருப்பது எங்களுக்கு பெருமைக்குரியது நாங்கள் இதை முன்னெடுக்கிறோம் என சொல்லி அவர்களுக்கு எல்லாம் மரியாதை செய்யும் விதமாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ பிரதமர் நாடு முழுக்க சொல்லிவிட்டார் என்பதற்காக வேறு வழியில்லாமல் செய்வது போல பெயரளவில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு தீவிரமான முன்னெடுப்பை எங்களால் பார்க்க முடியவில்லை.
தமிழகத்தைச் சார்ந்த நாங்கள் கேட்கிறோம் தமிழகத்தினுடைய முதல்வர் இந்த சுதந்திர தின கொண்டாட்டங்களில் முன்னணியில் நின்று மக்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்க வேண்டும். முன்னுதாரணமாக தேசிய கொடியை அவருடைய சமூக வலைதளத்தின் பக்கங்களில் அவர் பகிர வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இதை தமிழகத்தினுடைய பொதுமக்களில் ஒருவராக எதிர்பார்க்கிறேன்.
உங்களுக்கு சித்தாந்தம் தேசியம் இருக்கிறதா இல்லையா தேசிய கொடிக்கு மரியாதை கொடுக்கிறீர்களா இல்லையா என்பதெல்லாம் உங்களுடைய தனிப்பட்ட இயக்கத்தின் சிந்தனையில் உள்ளதை நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் இப்போது தமிழகத்தைச் சார்ந்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள் இந்த 75வது சுதந்திர தின விழா கொண்டாட்ட நேரத்தில் நாம் இந்த நாட்டின் ஒற்றுமையை ஒருமைப்பற்றை தேச பக்தர்களை நேசிக்கின்ற வகையில் தியாகிகளை போற்றக்கூடிய வகையில் முதல்வர் இந்த விஷயங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பேசினார்.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !