Asianet News TamilAsianet News Tamil

வர்தா புயலால் சேதம் இல்லையாம்….சொல்கிறது மத்திய ஆய்வுக்குழு…

vardha strom-D3FSLU
Author
First Published Dec 31, 2016, 6:03 AM IST


வர்தா புயலால் சேதம் இல்லையாம்….சொல்கிறது மத்திய ஆய்வுக்குழு…

கடந்த 12 ஆம் தேதி வங்க கடலில்  உருவான வர்தா புயல் கரையை கடந்ததால் சென்னையை புரட்டிப் போட்டது. சென்னை  நகரிலும்,  காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. கூரைகள் காற்றில் பறந்தன.வாழைமரங்கள் உள்ளிட்ட பயிர்களும் நாசமாயின.

ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார  வினியோகம்  பாதிக்கப்பட்டது. போக்கு வரத்தும் முடங்கியது. புயல்-மழையின்  காரணமாக 29 பேர் உயிர் இழந்தனர்.

புயல் நிவாரண பணிக்காக உடனடியாக 500 கோடி ரூபாய் நிதி ஒதுச்சி முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். அத்துடன்,உடனடி  நிவாரணமாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து.1,000 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்குகோரிக்கை விடுத்த அவர், புயல் சேதங்களை பார்வையிட குழு ஒன்றை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்து வர்தா புயலால் தமிழத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், சேதங்களை சீரமைக்க 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார். 

இதனையடுத்து புயல் தாக்கியதால், பெரும் சேதத்தை சந்தித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய  மாவட்டங்களை பார்வையிட்டு சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் திரு. Praveen Vashista தலைமையில், மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையைச் சேர்ந்த இயக்குநர் திரு. K.Manocharan, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை உதவி இயக்குநர் திரு. R.B.Kaul உட்பட, 9 பேர் கொண்ட மத்திய குழுவினர் தமிழகம் வந்தனர்.

தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த அக்குழுவினர் அடுத்த இரு நாட்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர். பின்னர் டெல்லி சென்றனர்.

இதனையடுத்து வர்தா புயலின் சேதங்களை மதிப்பிட்டு எவ்வளவு நிவாரண  நிதி வழங்க பரிந்துரைப்பார்கள் என தமிழக மக்கள் நினைத்திருந்த வேளையில் அக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்த கருத்து அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

பிரதமரின் நிவாரண  நிதியை வெறும் அளவிற்கு வர்தா புயலால் தமிழகத்தில் பெரும் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருப்பது தமிழக மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios