Vanitha Vijayakumar had taken her daughter to her home in Chennai
விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா விஜயகுமார் இவர் சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் முதலில் டி.வி. நடிகர் ஆகாஷைத் திருமணம் செய்தார். பின் அவரைப் பிரிந்த பிறகு ஆனந்தராஜ் என்பவரை இரண்டாவதாக மணந்தார். இவர்களுக்கு ஜெயனிதா என்ற குழந்தை உள்ளது.
மேலும் இவர்களுக்குள்ளேயும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் ஆனந்தராஜிடம் விவாகரத்து பெற்றுப் பிரிந்தார் வனிதா. அதன்பிறகு ஆனந்தராஜ் ஐதராபாத்தில் வசித்தார்.
இதன்பேரில், குழந்தை கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வனிதா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நடிகை வனிதா கூறுகையில், 'எனது வீட்டுக்கு வந்த வனிதா, குழந்தையைக் கடத்திக்கொண்டு சென்னை சென்றுவிட்டார்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் பற்றி வனிதா விஜயகுமார் கூறும்போது, “ஆனந்தராஜிடம் விவாகரத்து பெற்றுச் சென்றபிறகு அவர் வசிக்கும் முகவரிகூட எனக்குத் தெரியாமலிருந்தது. என் குழந்தையையும் கூடவே அழைத்துச் சென்றுவிட்டார். இ-மெயில் மூலம் குழந்தையைப் பற்றி விசாரித்தேன். ஆனால், என்னைப் பற்றி என் குழந்தையிடம் அவர் அவதூறாகச் சொல்லி இருக்கிறார்.
இ-மெயில் முகவரி மூலம் எனது தொலைபேசி எண்ணைத் தெரிந்துகொண்டு என் மகள் என்னிடம் பேசினாள். தன்னை வந்து காப்பாற்றும்படி அவள் கூறினாள். அதன்பேரில் ஐதராபாத் சென்று போலீஸ் நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்ததுடன் அவர்களுடன் சென்று குழந்தையை அழைத்து வந்தேன். இது எப்படிக் கடத்தல் ஆகும்?
நான் தற்போது வெளியூரில் இருக்கிறேன். ஐதராபாத் போலீஸாரிடம் இதுபற்றிக் கேட்டபோது அவர்கள் என்னை நேரில் வரச் சொல்கிறார்கள். அங்குச் சென்றால் கைது செய்யக்கூடும். குழந்தைக்காக கைதாவது பெருமையாகக் கருதுவேன். ஆனால், இதைச் சட்டப்படி சந்திப்பேன் என்று கூறியிருக்கிறார்.
