Vairamuthu who greeted Ilayaraja
குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2017-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விபூஷன் விருது பெற்ற இளையராஜாவை தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், விஷால் உள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசி மூலமும், டுவிட்டர் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விருது, மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது; மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை. தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக தான் கருதுவதாக இளையராஜா கூறினார்.
பத்மவிபூஷன் விருதுக்கு இளையராஜா பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, கவிஞர் வைரமுத்து, கவிதை நடையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்”
- என்ற காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு, இளையராஜாவுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
