Asianet News TamilAsianet News Tamil

சத்தமே இல்லாமல்.. சைலண்டாக வைகோவின் மருமகனை தட்டித்தூக்கிய அண்ணாமலை!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே நான்கு முனை போட்டி நிலவுவதால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Vaiko son in-law Karthikeyan Gopalsamy join bjp tvk
Author
First Published Apr 11, 2024, 3:12 PM IST

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் கார்த்திகேயன் கோபாலசாமி அக்கட்சியில் இருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே நான்கு முனை போட்டி நிலவுவதால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக இந்த முறை பாஜக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. 

இதையும் படிங்க: உங்க அப்பா டி.ஆர்.பாலு தான் சமூகவிரோதி! ஜூன் 4-ம் தேதி கொங்கு மண்டலம் யாருக்குன்னு பார்த்துக்களாம்! அண்ணாமலை

இந்த தேர்தலில் எப்படியாது தமிழகத்தில் தங்களது செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டும் என்பதால் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைத்து வருகின்றனர். 

இதையும் படிங்க:சாதிய அரசியல் செய்வது யார்? அழியபோவது அதிமுகவா? அண்ணாமலையின் ஆனவமா? தெறிக்கவிடும் கே.சி.பழனிசாமி!

இந்நிலையில், வைகோவின் மருமகன் முறை உறவினரான  கார்த்திகேயன் கோபாலசாமி, மதிமுகவின் முன்னாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து வைகோவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.  மதிமுகவின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்து சமீபத்தில் புதுக்கோட்டை செல்வம் கட்சியில் இருந்து விலகிய நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios