சாதிய அரசியல் செய்வது யார்? அழியபோவது அதிமுகவா? அண்ணாமலையின் ஆனவமா? தெறிக்கவிடும் கே.சி.பழனிசாமி!

பாஜகவால் தான் அதிமுக சென்ற சட்டமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை வென்றது இல்லையென்றால் 30 தொகுதிகளுக்கு கீழ்தான் வென்றிருக்கும் என்கிறார் அண்ணாமலை அப்படி என்றால் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலையை ஏன் அந்த பாஜக வாக்காளர்கள் தோற்கடித்தார்கள்? 

Who does caste politics? Former MP KC Palanisamy tvk

அண்ணாமலை சாதி, மத அரசியலை மட்டுமே கையிலேடுக்கிறார் வளர்ச்சிக்கான திட்டங்களை பற்றி பேச மறுக்கிறார் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்:  பிரதமர் மோடி பல்லடத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையும் அம்மா அவர்களையும் புகழ்ந்து பேசுகிறார் அப்பொழுது அண்ணாமலை மோடியிடம் சொல்ல வேண்டியது தானே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மாவும் தேவை இல்லை என்று. பிரதமருக்கு அவர்களின் அருமை தெரிகிறது. ஆனால் அண்ணாமலைக்கு இன்னும் அந்த அரசியல் முதிர்ச்சி இல்லை. 

* பாஜகவால் தான் அதிமுக சென்ற சட்டமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை வென்றது இல்லையென்றால் 30 தொகுதிகளுக்கு கீழ்தான் வென்றிருக்கும் என்கிறார் அண்ணாமலை அப்படி என்றால் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலையை ஏன் அந்த பாஜக வாக்காளர்கள் தோற்கடித்தார்கள்? அதிமுக கூட்டணியில் வென்ற 4 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலை சந்தித்தால் பாஜகவின் பலம் தெரியும். இதுவரை திமுக மற்றும் அதிமுக தயவில் மட்டுமே சில தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. 

* அண்ணாமலையால் பாஜக வளரவில்லை! கோவையில் 2014- ல் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்தார் என்று தானே அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.  

* கடைசி நிமிடம் வரை எப்படியாவது அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்று கதவு திறந்து இருக்கிறது என்றெல்லாம் போராடியது பாஜக தேசிய தலைமை வேண்டுமானாலும் அண்ணாமலையை தலைமை பதவியில் இருந்து நீக்கி விடுகிறோம் என்கிற உத்தரவாதம் எல்லாம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதிமுக தொண்டர்கள் வெற்றியோ தோல்வியோ பாஜகவோடு உறவு வேண்டாம் என்பதில் மிகத் தெளிவாக உறுதியோடு பயணிக்கிறார்கள். 

* தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி கொடுத்திருக்கிறோம் மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவு கொடுக்கவில்லை என்கிறார். ஆனால் தமிழகத்திலிருந்து எவ்வளவு வரி மத்திய அரசுக்கு வந்தது அதற்கு உண்டான முறையான பங்கீடு வரவில்லை என்பதுதான் தமிழக மக்களின் குற்றச்சாட்டு இதில் மற்ற மாநிலங்களுக்கு கொடுத்தது பற்றி பேசுவது சரியான ஒப்பீடு அல்ல.

* தேர்தல் முடிந்து பாருங்கள் ஓ.பி.எஸ் கைக்கு கட்சி வந்துவிடும் என்கிறார்.  அண்ணாமலை யார்? அதிமுகவின் தலைமையை முடிவு செய்வதற்கு. தொண்டர்களால் தான் தலைமை என்ற புரட்சித்தலைவரின் விதியை  மற்றிகொடுததே நீங்கள் தானே. ஓ.பி.எஸ் உடன் பயணித்தவர்கள் எவ்வளவு பேர் அவரது பாஜக நிலைப்பாட்டிற்காக இன்று அவருடன் தொடர்கிறார்கள்? அதிமுக உணர்வாளர்கள் அவரை விட்டு விலகி விட்டார்கள். 

* கட்சி முக்குலத்தோர் கவுண்டர் என சாதி ரீதியாக பிரிந்து இருக்கிறது என்கிறார் அண்ணாமலை. ஆனால் அந்த பிரித்தாலும் சூழ்ச்சியை முன்னெடுத்ததே பாஜக தானே. ஒரு பிரதம அமைச்சரே "நல்ல சாதிய பின்புலம் உள்ளவர் அண்ணாமலை" என்று சொல்வதில் இருந்தே சாதிய அரசியல் செய்வது யார்? என்பது தெரிகிறது. 

* முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்கிறீர்கள் அந்த ஊழல்வாதிகளை பாதுகாப்பதே  நீங்கள் தானே.   ADMK Files வெளியிடுவேன் என்றீர்களே ஏன் இன்றுவரை அதை வெளியிடவில்லை? அதற்காக பெறப்பட்ட தொகை எவ்வளவு? அந்த ஊழல்வாதிகள் மீது என்ன காரணத்தினால் இன்று வரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? உங்களுக்கும் அதில் பங்கு இருக்கிற காரணத்தால் தான் இன்று வரை அதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா? நீங்கள் மாட்டினிடம் பணம் வாங்கியது என்ன ஆனது மாநில தலைவராக இருந்து பெற்றுக் கொடுத்தது அண்ணாமலை தானே அது நேர்மையாக வந்த பணமா?

* திமுகவை எதிர்க்க மட்டுமே அதிமுக துவக்கப்பட்டது என்றால் தமிழக அரசியலின் அரிச்சுவடியே அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று தான் அர்த்தம். அண்ணா காலத்திலேயே அடித்தட்டு மக்களிடம் திராவிட உணர்வை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.  திமுக திசை மாறிய பொழுது அண்ணா வழியிலான திராவிட இயக்கமாக அதிமுகவை உருவாக்கியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 

* தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில்  கோவையில் போட்டியிடும் அண்ணாமலை பாஜக 10 ஆண்டுகளில்  கோவைக்கு செய்த நலத்திட்டங்கள் என்ன?  அண்ணாமலை வெற்றி பெற்றால் பாஜக ஆட்சிக்கு  வந்தால் செயல்படுத்த போகும் திட்டங்கள் என்ன? இதுகுறித்து பேச எதுவுமே இல்லை என்பதால் அதிமுகவை குறைகூறி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார். அண்ணாமலை கோவையில் வெற்றிபெற்றால் கோவையில் மத ரீதியிலான மற்றும் சாதி ரீதியிலான பதற்றத்தை உருவாக்கிவிடுமோ என்கிற அச்சத்தை அண்ணாமலை மேலும் வழுபடுத்தியிருகிரார். சாதி, மத அரசியலை மட்டுமே கையிலேடுக்கிறார் வளர்ச்சிக்கான திட்டங்களை பற்றி பேச மறுக்கிறார் என கே.சி.பழனிசாமி பதிவிட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios