உங்க அப்பா டி.ஆர்.பாலு தான் சமூகவிரோதி! ஜூன் 4-ம் தேதி கொங்கு மண்டலம் யாருக்குன்னு பார்த்துக்களாம்! அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்? யாரும் வரமாட்டார்கள் என அவர்களுக்கே தெரியும். பணத்தைக் கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ சென்றால் கூட்டம் வராது. 

Annamalai to challenge DMK tvk

பண அரசியல் என்ற பேயை ஓட்ட கோவை மக்கள் கையில் வேப்பிலை வைத்துக்கொண்டு தயாராக இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: பாஜக தலைவர்கள் செய்வது ரோடு ஷோ அல்ல. மக்கள் தரிசன யாத்திரை. மக்களை தரிசிப்பதற்காகவே பாஜக தலைவர்கள் தமிழகம் வருகிறார்கள். ஒரு பிரதமர் இப்படி மக்கள் அருகில் வந்து பார்க்கிறார் என்றால் மக்கள் மீது அவர் வைத்துள்ள அன்பை காட்டுகிறது. மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் ரோடு ஷோ செல்ல தயாரா? எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்? யாரும் வரமாட்டார்கள் என அவர்களுக்கே தெரியும். பணத்தைக் கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ சென்றால் கூட்டம் வராது. 

இதையும் படிங்க: சாதிய அரசியல் செய்வது யார்? அழியபோவது அதிமுகவா? அண்ணாமலையின் ஆனவமா? தெறிக்கவிடும் கே.சி.பழனிசாமி!

களத்தில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே தான் போட்டி. மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் உள்ளது. ஆகையால் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே தானே போட்டி. களத்தில் யார் போட்டியாளர்களாக இருக்கிறார்களோ அவர்கள் செய்கிற தவறை தான் சொல்ல முடியும். அதனால்தான் பிரதமர் மோடி மேடைகளில் திமுகவை மட்டும் பேசி அதிமுகவைப் பற்றி பேசவில்லை. எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார்.

பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்கிறார் அமைச்சர் டிஆர்பி. ராஜா. அவரின் தந்தை டிஆர். பாலு தான் முதல் சமூக விரோதி. சாராயம் விற்பவர்கள் சமூக விரோதிகள் தானே. அப்படியெனில் டிஆர். பாலு சமூக விரோதிதான். சமூக விரோதியின் பையனாக இருந்துகொண்டு டிஆர்பி ராஜா இப்படி பேசுவது நகைச்சுவையாக உள்ளது.

இதையும் படிங்க:  நெல்லை மக்களவை தொகுதி தேர்தல் ரத்தாகிறதா? என்ன காரணம்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்!

மேலும் பேசிய அவர் ஊழல் பல்கலைக்கழகத்திற்கு பெயரை ஸ்டாலின் என்று வைத்தால் அதில் வேந்தராக மோடி இருப்பார். பல்கலைக்கழகங்களில் நடக்கும் பிரச்சனைகளை வேந்தர்கள்தான் வெளிக்கொண்டு வருவார்கள். பண அரசியல் என்ற பேயை ஓட்ட கோவை மக்கள் கையில் வேப்பிலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேப்பிலையோடு காத்திருக்கும் கோவை தொகுதி மக்கள் ஜூன் 4ம் தேதி பண அரசியல் பேயை ஓட்டிவிடுவார்கள். ஜூன் 4ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை பார்த்துவிடலாம் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios