vadivelu blood vomit comedy 4 fake josiyar arrested by police
வடிவேல் படத்தில் வருவது போன்று பணம் தரவில்லையென்றால் ரத்தம் கக்கி சாவிங்க என மிரட்டி பணம் பறித்த போலி ஜோசியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் 4 ஜோசியர்கள் பல மாதங்களாக குறி சொல்லும் வேளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு வீடாய் கதவை தட்டி குறி சொல்வதாக கூறி 10,000 ரூபாய் பணம் வாங்குவதே வாடிக்கை. பணம் எதற்கு என்று கேட்டல் தோஷம் இருக்கு அதை கழிக்க என கூறி வந்துள்ளனர்.
இந்நிலையில், கோயம்புத்தூர் பஸ்டாண்டு பகுதியில் இதுபோன்ற வேளையில் ஈடுபட்டுள்ளனர். பணத்தை தர வேண்டும் இல்லையென்றால் ரத்தம் கக்கி சாவீர்கள் என்று அவர்களில் ஒரு ஆளை தயார் செய்து ரத்தம் கக்குவது போன்று நடித்துள்ளனர்.
இதையறிந்த பொதுமக்கள் சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் என்பதும், போலி ஜோசியர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
