தென் ஆப்பிரிக்காவின் அரியவகை முதலை 7 குஞ்சுகள் பொரித்தது…!

வடநெம்மேலி முதலைப்பண்ணையில், தென் ஆப்பிரிக்கா நாட்டு அரியவகை முதலை ஒன்று அடைகாத்து 7 குஞ்சுகள் பொரித்தது. அதனை: கண்ணாடி தொட்டியில் பாதுகாக்கப்படுகிறது.

Vadanemmeli Crocodile

வடநெம்மேலி முதலைப்பண்ணையில், தென் ஆப்பிரிக்கா நாட்டு அரியவகை முதலை ஒன்று அடைகாத்து 7 குஞ்சுகள் பொரித்தது. அதனை: கண்ணாடி தொட்டியில் பாதுகாக்கப்படுகிறது.

காஞ்சிபுரம மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலை பண்ணையில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. Vadanemmeli Crocodile

இங்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முதலைகள் அதிகம் உள்ளன. இதையொட்டி தென் ஆப்பிரிக்கா காடுகளில் உள்ள நீர்நிலைகளில் உள்ள டவார்க் கெய்ன் எனப்படும் 10 முதலைகள், வடநெம்மேலி முதலைப் பண்ணைக்கு வரவழைக்கப்பட்டு, பார்வையாளர்கள் அதனை கண்டுகளிக்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தென் ஆப்பரிக்கா நாட்டு முதலை ஒன்று (டவார்க்கெய்ன்) முட்டை இட்டு 7 குஞ்சுகள் பெறித்துள்ளது. தற்போது இந்த முதலைக் குட்டிகள் கண்ணாடி தொட்டியில் வைத்து முதலைப் பண்ணை ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர். அந்த முதலைக் குட்டிகள் ஒரு வயதை கடக்கும் வரை கண்ணாடி தொட்டியில் பராமரிக்கப்படும் என்றும், தினமும் மீன் குஞ்சுகள் இந்த குட்டிகளுக்கு உணவாக வழங்கப்படுவதாகவும் முதலை பராமரிப்பு ஊழியர்கள் தெரிவித்தனர். Vadanemmeli Crocodile

இந்த முதலைக்குட்டிகள் 3 வயதை கடந்த பிறகு தண்ணீர் குளத்திற்குள் விடப்பட்டு, பார்வையாளர்களுக்கு அவை காட்சி படுத்தப்படும் என கூறினர். தற்போது ஒரு தனி அறையில் அந்த 7 முதலை குட்டிகள் கண்ணாடி பெட்டியில் நிரம்பிய தண்ணீரில் வைத்து பாதுக்காக்கப்படுகின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios