Asianet News TamilAsianet News Tamil

சிறுவர்கள் மீதான சாதி தீண்டாமை.. குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை.. தென்மண்டல ஐ.ஜி உத்தரவு..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே  பட்டியிலினத்தை சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்கு திண்பண்டம் தரமுடியாது என ஊர் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக பெட்டி கடைக்காரர் பேசிய வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

Untouchability of children in Panchakulam village - Criminals barred from entering town
Author
First Published Sep 18, 2022, 1:16 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே  பட்டியிலினத்தை சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்கு திண்பண்டம் தரமுடியாது என ஊர் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக பெட்டி கடைக்காரர் பேசிய வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாஞ்சாங்குளம் கிராமத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பள்ளி சிறுவர்கள் சிலர்‌ திண்பண்டம்‌ வாங்குவதற்காக அங்குள்ள பெட்டிக்‌ கடைக்கு சென்ற போது, அப்போது அந்த கடைக்காரர் , 'ஊர்க்‌ கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இனிமேல்‌ யாரும்‌ தின்பண்டம்‌ வாங்க வர கூடாது என்றும் இதை உங்கள்‌ வீட்டில்‌ போய்‌ சொல்லுங்கள்‌' என்றும் கூறி அந்த சிறுவர்களை அனுப்பி விடுகிறார். 

மேலும் படிக்க:Viral : ஊர் கட்டுப்பாடு என பெயரில் சிறுவர்களுக்கு திண்பண்டங்களை வழங்க மறுத்த கடைக்காரர்!

இதனை அவரே விடியோ எடுத்து சமூக வலைதளங்களில்‌ வெளியிட்டதாகக்‌ கூறப்படுகிறது. இந்த விடியோ பலராலும் பகிரப்பட்டு தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டியிலினத்தை சேர்ந்த அந்த சிறுவர்களுக்கு திண்பண்டம் கொடுக்க மறுத்து தீண்டாமையும், சாதிய பாகுபாடு காட்டி, கடைக்காரர் ஊர் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக திருப்பி அனுப்பிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக இதுவரை 5 பேர்‌ மீது கரிவலம்வந்தநல்லூர்‌ போலீஸார்‌ வழக்குப்‌ பதிவு செய்துள்ளனர். மேலும் கடை உரிமையாளர்‌ மகேஸ்வரன்‌ (40), ராமச்சந்திரன்‌ (22) ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த ஊரை சேர்ந்த குமார்‌, சுதா, முருகன்‌ ஆகிய மூவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க:சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரம்..! பள்ளியில் சாதிய பாகுபாடா..? ஆட்சியரிடம் அறிக்கை ..?

இதனிடையே, சங்கரன்கோவில்‌ கோட்டாட்சியர்‌ சுப்புலெட்சுமி முன்னிலையில்‌  அக்கடைக்கு சீல்‌ வைக்கப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ கோட்டாட்சியர்‌ கந்தசாமி முன்னிலையில்‌ கடையில்‌ நோட்டீஸ்‌ ஒட்டப்பட்டது.
தொடர்ந்து, பாஞ்சாகுளம்‌ காலனி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, பள்ளியிலும்‌ ”எங்களை கீழை தான் உட்கார சொல்லுவார்கள்” என்று அப்பகுதி சிறுவர்கள் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற தீண்டாமை சம்பவங்களை ஆசிரியர்கள்‌ கண்டுகொள்வதில்லை என்றும்‌ மாணவர்களின் பெற்றோர்கள் கூறினர்.

எனவே பள்ளிக்கல்வித்‌ துறை அதிகாரிகள்‌ சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களிடம்‌  விசாரணை நடத்தவுள்ளனர். மேலும் சாதி கலவரம் , வன்முறை போன்றவை நிகழாமல் இருக்க பாஞ்சாகுளத்தில்‌ பலத்த போலீஸ்‌ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில்‌, தீண்டாமை ஒடுக்குமுறை தடுக்கவும்‌ தொடர்‌ பிரச்னைகளை தவிர்க்கவும்‌, பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்து குற்றவாளிகள்‌ ஊருக்குள்‌ நுழையத்‌ தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வெளிப்புற ஏற்பாடு எனும் பிரிவை பயன்படுத்த தென்மண்டல் ஐ.ஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios