Asianet News TamilAsianet News Tamil

தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட வரலாறு காணாத பெருமழை.. முன்பே எச்சரித்த ஆற்காடு பஞ்சாங்கம்...

தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை குறித்து ஏற்கனவே ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

Unprecedented heavy rains in southern districts.. Arcot Panchangam warned earlier... Rya
Author
First Published Dec 27, 2023, 9:36 AM IST | Last Updated Dec 27, 2023, 9:36 AM IST

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 16, 17, 17 ஆகிய தேதிகளில் ரலாறு காணாத அளவு கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது பெயத் கனமழையால் தூத்துக்குடியில் 1000 கிராமங்கள் தனித்தீவாக மாறியது. வட கிழக்கு பருவமழை காலத்தில் தூத்துக்குடியில் இயல்பை விட 68 சதவீதமும், திருநெல்வேலியில் 135 சதவீதமும், கன்னியாகுமரியில் 103 சதவீதமும், தென்காசியில் 80 சதவீதமும் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.

பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், மண் அரிப்பு காரணமாக ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்ததால் சாலை, ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப்படை, ராணுவம், கடற்படை என முப்பைகளும் தென் மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டன.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள், பல்வேறு மாவட்டங்களில் உள்ள மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். கடந்த 21-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் தூத்துக்குடி நெல்லை மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். மழை நீர் வடிந்த நிலையில் வெள்ள பாதித்த பகுதிகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன.

பாஜகவை எதிர்க்க தைரியமில்லாத இபிஎஸ்.. வெள்ள நிவாரணத்துக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கல.. செல்வப்பெருந்தகை விளாசல்

இந்த நிலையில் தென் மாவட்ட கனமழை குறித்து ஏற்கனவே ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு மழை மிக கடுமையாக இருக்கும் என்றும், இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஊர்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios