தென்னிந்திய தொழில் வர்த்தக சபை ஆண்டுக் கூட்டம்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சிறப்புரை!
தென்னிந்திய தொழில் வர்த்தக சபை ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சிறப்புரை ஆற்றினார்

பொருளாதாரம், வணிகம், பெருவணிகம், தொழிற்சாலை போன்றவற்றின் மீதான அரசாங்கக் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துதலை முதன்மை நோக்கமாக கொண்டு தென்னிந்திய தொழில் வர்த்தக சபை செயல்பட்டு வருகிறது. கல்வி மேம்பாடு, சுகாதாரம், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்றின் மேம்பாட்டுக்குக்கான பணிகளிலும் தென்னிந்திய தொழில் வர்த்தக சபை ஈடுபட்டு வருகிறது.
தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் 113ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநில சட்டமன்றத் தேர்தல்: சுற்றுப்பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி!
தொடர்ந்து, சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 6 எம்வி மெடிக்கல் லீனியர் ஆக்சிலரேட்டர் அமைப்பையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் 113ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருப்பதாகவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 6 எம்வி மெடிக்கல் லீனியர் ஆக்சிலரேட்டர் அமைப்பையும் அர்ப்பணிக்கவுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சராக இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள ராஜீவ் சந்திரசேகர், நமது நாடு கட்டமைத்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, மக்கள், சமூகம் சார்ந்து, நாடு முழுவதும் நன்மைக்காக தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளது என்றார்.
புதுமை, தொழில்முனைவு, மின்ன்ணு உற்பத்தி, டிஜிட்டல் கட்டமைப்பில் ஆகியவற்றில் இந்தியாவின் வெற்றி, நாட்டின் பெரிய வளர்ச்சி வாய்ப்பினை சுட்டிக்காட்டுவதாக தெரிவித்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அரசாங்கம், நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் டிஜிட்டல் மயமாக்கல் இன்னும் வேகமெடுக்கும் என்றும் உறுதியளித்தார்.
இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையிலும், நாட்டில் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ராஜீவ் சந்திரசேகர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள டிஜிட்டல் இந்தியா வரைவு மசோதாவில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்த மசோதா, வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுக செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.