Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா… நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்!!

சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். 

union health department Letter to tamilnadu Govt
Author
Tamilnadu, First Published Dec 4, 2021, 4:30 PM IST

சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

union health department Letter to tamilnadu Govt

ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. தென் ஆப்ரிக்காவில் பெங்களூரு வந்த 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யபட்டிருந்தது. இந்த நிலையில் இன்று குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

union health department Letter to tamilnadu Govt

இதேபோல் லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 2 பேர், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒருவர் என 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி ஆகியிருந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் ஒமைக்ரான் ரிஸ்க் நாடுகளிலிருந்து வந்தவர்களின் தொற்று பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக  மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 3 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  எனவும்  கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நவம்பர் இறுதியில் 93 ஆக இருந்த  தொற்று இம்மாத முதல் வாரத்தில் 128 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios