எங்கெல்லாம் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமோ, அங்கெல்லாம் ஆய்வு செய்து இந்த ஆண்டே புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், ரவி, சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருவதாகவும், எங்கெல்லாம் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமோ, அங்கெல்லாம் ஆய்வு செய்து இந்த ஆண்டே புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.

மேலும் பேசிய அவர், கடந்த ஓராண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதையொட்டி வரும் 16-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக விவசாயிகளுடன் முதலமைச்சர் பேசவிருப்பதாகவும் கூறினார்.மாநிலம் முழுவதும் சீரான மின் விநியோகம் உள்ளதாகவும், கோடை காலத்திலும் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த செய்தி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
