Asianet News TamilAsianet News Tamil

பள்ளி, கல்லூரியில் நான் ஜஸ்ட் பாஸ் தான்.... அதற்கு கலைஞர் தான் காரணம் - உதயநிதி ஓபன் டால்க்

பள்ளி மற்றும் கல்லூரியில் நான் படிக்கும் போது ஜஸ்ட் பாஸ் தான் ஆவேன், ஆனால் தமிழ் பாடத்தில் மட்டும் 85, 90 மதிப்பெண்கள் எடுப்பேன் அதற்கு கலைஞர் கருணாநிதி தான் காரணம் என்று விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

udhayanidhi stalin speech about his marks in school life
Author
First Published Jan 4, 2023, 12:55 PM IST

தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் சென்னையில் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான தொடக்க விழா இன்று நடைபெற்ற நிலையில், இதில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பள்ளி, கல்லூரிகளில் நான் படிக்கும் போது அனைத்து பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ் தான் ஆவேன். ஆனால், தமிழில் மட்டும் 85, 90 மதிப்பெண்கள் எடுத்துவிடுவேன். எனக்கு இயல்பாகவே தமிழ் மீது ஆர்வம் உண்டு மேலும் கலைஞர் கருணாநிதியின் பேச்சு, எழுத்து தான் இதற்கு முக்கிய காரணம். முரசொலியை படித்து தான் எனது தமிழ் ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டேன்.

வீட்டில் குடித்துவிட்டு நண்பர்களுடன் கும்மாளம்; தட்டிக்கேட்ட மனைவி கொடூர கொலை

முன்காலங்களில் நூலகம் என்றாலே பழமையான கட்டிடம் தான் நமது சிந்தனைக்கு வரும். அப்படிப்பட்ட மனநிலையை மாற்றியவர் கலைஞர் கருணாநிதி. சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழகத்தை அறிவு தளத்தில் ஒரு படி மேலே உயர்த்தியது.

இன்று அதே போல், தென் தமிழகத்தில் மதுரையில் அறிவு மாற்றத்திற்காக ரூ.115 கோடியில் மிகப்பெரிய நூலகம் ஒன்றை உருவாக்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். விரைவில் அந்த நூலகம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதே போன்று திமுக இளைஞரணி சார்பில் இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்கி உள்ளோம்.

நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை; அனைவருக்கும் பொதுவானவன் - உயநிதி ஸ்டாலின்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை உள்ளடக்கியுள்ள அன்பகம் நூலகத்தை ஆர்வமுள்ள இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போன்று எனது சொந்த தொகுதியான சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் ஒரு நூலகம் மற்றம் நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. 

கலை இலக்கியம் பெரும் சமூக பார்வையை உண்டாக்கும், அதே போல் தனிப்பட்ட வாழ்க்கையிலும், கலை இலக்கியம் உங்கள் தலைமை பண்பை மேம்படுத்தும். இதனால் மாணவர்கள் கல்வியோடு சேர்த்து இதுபோன்ற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு அண்ணனாக, உடன் பிறவா சகோதரனாக மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios