குஜராத்தில் பேசிய அமித்ஷா பீகாரில் ஜெயித்து விட்டோம் அடுத்து தமிழ்நாடு தான் என்று பேசியிருக்கிறார். அமித்ஷா பயமுறுத்த பார்க்கிறார். சுயமரியாதைமிக்க மகளிர் இருக்கும் வரை தமிழ்நாட்டில் என்றுமே சங்கிகளால் காலூன்ற முடியாது.
திமுக சார்பில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடந்து வருகிறது. இந்த மாநாட்டுக்கு திமுக எம்.பி. கனிமொழி தலைமை தாங்கினார். மேலும் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சங்கி கூட்டம் 10 நாட்கள் தூங்காது
இந்த திமுக மகளிரணி மாநாட்டில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஏற்கெனவே நடத்திய மேற்கு மண்டல இளைஞரணி மாநாட்டை பார்த்து சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் 10 நாட்கள் தூங்காமல் புலம்பிக் கொண்டிருந்தன. இப்போது மகளிரணி மாநாட்டை பார்த்து சங்கிகளும், அடிமைகளும் இன்னும் 10 நாட்கள் தூங்கப் போவதில்லை.
மகளிர் கடலே சாட்சி
திமுக அரசு பெண்களுக்கு எத்தனை திட்டங்களை நிறைவேற்றியதற்கு என்பதற்கு இங்கு கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி. திராவிட மாடல் அரசு விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. ஆனால் பெண்கள் மத்தியில் திமுகவுக்கு இருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் ஒன்றிய பாஜக அரசு புலம்பி வருகிறது. தமிழகத்துக்கான நிதி அனைத்தையும் நிறுத்தி விட்டது.
அமித்ஷா பயமுறுத்த பார்க்கிறார்
குஜராத்தில் பேசிய அமித்ஷா பீகாரில் ஜெயித்து விட்டோம் அடுத்து தமிழ்நாடு தான் என்று பேசியிருக்கிறார். அமித்ஷா பயமுறுத்த பார்க்கிறார். சுயமரியாதைமிக்க மகளிர் இருக்கும் வரை தமிழ்நாட்டில் என்றுமே சங்கிகளால் காலூன்ற முடியாது. டெல்லியை பார்த்து பயப்பட இது ஒன்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல; அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம். பாஜக பழைய அடிமை, புதிய அடிமை என யாரை கூட்டி வந்தாலும் தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான்.
திமுக தேர்தல் அறிக்கையை காப்பி, செய்ட் செய்யும அதிமுக
திமுகவை பார்த்து அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைத்துள்ளது. எப்படியும் திமுக தேர்தல் அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்யத்தான் போகிறார்கள். ஆனால் அவர்கள் மக்கள் என்றும் நம்பப் போவது இல்லை. அடுத்து திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிருக்கு மேலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.


