Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் சர்வதேச கால்பந்து போட்டி..! விளையாட்டரங்கிற்கு வராத ரசிகர்கள்..! வேதனை தெரிவித்த உதயநிதி

தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற சர்வதேச போட்டிகளுக்கு ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Udayanidhi Stalin has requested the fans to support the international matches held in Tamil Nadu
Author
First Published Feb 19, 2023, 12:57 PM IST

சென்னயில் சர்வதேச போட்டி

தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில் பிப்ரவரி 18 முதல் 21 வரை 2022-2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சப் ஜூனியர் மற்றும் கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.  இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 28 மாநிலங்களில் இருந்து சுமார் 1100 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியை துவக்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பின்னர்  நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் நேபாள் இடையேயான நட்பு ரீதியான சர்வதேச  கால்பந்து போட்டியை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார். 

கலைஞரின் பேனா இல்லையென்றால் அண்ணாமலை ஆடு மேய்த்து கொண்டிருந்திருப்பார் - ஆ.ராசா அதிரடி

Udayanidhi Stalin has requested the fans to support the international matches held in Tamil Nadu

சர்வதேச போட்டிக்கு ஆதரவு

இதனை தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.  ஒரு சில குறைகளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், அதனை விரைவில் சரி செய்து தருவதாக கூறியுள்ளதாக தெரிவித்தார், இருந்தாலும் நேரு விளையாட்டு அரங்கில் இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு  இடையேயான சர்வதேச கால்பந்து போட்டியை காண ரசிகர்கள் பெருமளவு வரவில்லை என வேதனை தெரிவித்தவர், ரசிகர்கள் சர்வதேச அளவிலான போட்டிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்

மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி நீக்கம்.! காரணம் என்ன தெரியுமா.?

Follow Us:
Download App:
  • android
  • ios