மாநில உரிமையை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காத்திட தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் சூளுரைப்போம்-உதயநிதி

‘தை பிறந்தால், வழி பிறக்கும்’ என்பார்கள். இந்த தை மாதம் சேலத்தில் நடக்கவிருக்கும் நம் இளைஞர் அணியின் மாநில மாநாட்டில் ஒன்று கூடி, இந்திய ஒன்றியத்துக்கே வழிபிறக்கின்ற வகையில் அயராது உழைத்திட உறுதியேற்போம் என உதயநிதி தெரிவித்துள்ளார். 
 

Udayanidhi has said that we will take a pledge on Pongal day to restore statehood and protect the Indian Union KAK

பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகை சாதி, மதங்களைக் கடந்து தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் வீடுகளில் வண்ண,வண்ண கோலங்கள் இட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி, கரும்பு, பழங்கள், புது பானையில் பொங்கலிட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் புத்தாடைகள் அணிந்து உறவினர்கள் வீட்டிற்கும், நண்பர்கள் வீட்டிற்கும் பொங்கலும், கரும்பும் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Udayanidhi has said that we will take a pledge on Pongal day to restore statehood and protect the Indian Union KAK

உதயநிதியின் பொங்கல் சூளுரை

இந்தநிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு என் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 ‘தை பிறந்தால், வழி பிறக்கும்’ என்பார்கள். இந்த தை மாதம் சேலத்தில் நடக்கவிருக்கும் நம் இளைஞர் அணியின் மாநில மாநாட்டில் ஒன்று கூடி, இந்திய ஒன்றியத்துக்கே வழிபிறக்கின்ற வகையில் அயராது உழைத்திட உறுதியேற்போம். மாநில உரிமையை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காத்திட தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் சூளுரைப்போம் என உதயநிதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

பொங்கலோ பொங்கல்.! மாவிலை தோரணங்களோடு புது பானையில் பொங்கலிட்டு மக்கள் மகிழ்ச்சி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios