பொங்கலோ பொங்கல்.! மாவிலை தோரணங்களோடு புது பானையில் பொங்கலிட்டு மக்கள் மகிழ்ச்சி
விவசாயத்திற்கும், தமிழரின் மாண்பையும் பெருமைப்படுத்தும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிகாலையில் புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கி பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.
பொங்கல் கொண்டாட்டம்
இயற்கையையும், உழவுத் தொழிலையும், தமிழரின் மாண்பையும் பெருமைபடுத்தும் திருவிழா தான் பொங்கல் திருவிழாவாகும். உழவு என்பது தமிழர்களின் தொழிலாக மட்டும் அல்ல பண்பாட்டு மரபு. அதனால் தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் திருவிழாவை கொண்டாடிக் கொண்டு வருகின்றனர். தை முதல் நாள் உழைப்பின் திருநாளாக – தமிழர் பெருநாளாக கொண்டாடி வருகிறார்கள். வீடுகளில் வண்ண,வண்ண கோலங்கள் இட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி, கரும்பு, பழங்கள், புது பானையில் பொங்கலிட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும்.
புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாட்டம்
அந்த வகையில் இன்று பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் புத்தாடைகள் உடுத்தி, சூரிய பகவானை வங்கி புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்து வருகின்றனர். பொங்கல் வைக்க பஞ்சாங்கத்தில் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை சிறந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாலையிலேயே மக்கள் புதுப்பானையில் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி, பொங்கல் வைத்து பானையில் வைக்கப்பட்ட நீரானது பொங்கி வரும்போது “பொங்கலோ பொங்கல்”என மக்கள் உற்சாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படியுங்கள்
பொங்கல் விழாவில் இளம்பெண்ணுக்கு தனது சால்வையை அணிவித்துப் பாராட்டிய அளித்த பிரதமர் மோடி!