பொங்கல் விழாவில் இளம்பெண்ணுக்கு தனது சால்வையை அணிவித்துப் பாராட்டிய அளித்த பிரதமர் மோடி!
திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய பிரதமர் மோடி, நமது பண்டிகைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் விவசாயத்துடன் தொடர்புடையவை என்றும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை பொங்கல் கொண்டாட்டத்தில் பாடல் பாடிய இளம்பெண் தனது சால்வையை அன்பளிப்பாக வழங்கி பாராட்டினார்.
மத்திய இணையமைச்சர் எல். முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் இளம் பெண் ஒருவர் பாடல் பாடினார். பின், பிரதமர் மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். உடனேட பிரதமர் மோடி அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தனது தோளில் இருந்த சால்வையைப் பரிசாக அளித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர், 'ஒரே பாரதம் ஒன்றிணைந்த பாரதம்' என்ற உணர்வை இந்த விழா சித்தரிக்கிறது என்று கூறினார். இந்த ஒற்றுமை உணர்வு 2047ஆம் ஆண்டுக்கான 'விக்சித் பாரத்' தொலைநோக்குப் பார்வைக்கு பலம் தரும் என்றும் பிரதமர் கூறினார்.
பச்சிளம் குழந்தைக்கு ஸ்க்ரூ, பேட்டரி, நெயில் பாலிஷ் ஊட்டி சாகடித்த கொடூர பெண்!
"உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துக்கள்! இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மனநிறைவு பொங்க நான் விரும்புகிறேன்" என்றும் அவர் கூறினார். "இன்று, நான் எனது உறவினர்களுடன் பொங்கல் கொண்டாடுவது போல் உணர்கிறேன்" எனவும் பிரதமர் மோடி கூறினார்.
பண்டிகைகளில் பொதிந்துள்ள கலாச்சாரப் பின்னணியைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
"இந்த பாரம்பரியத்தின் மையத்தில் நமது விவசாயிகள் உள்ளனர். உண்மையில், நமது பண்டிகைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் விவசாயத்துடன் தொடர்புடையவை" என்றும் அவர் கூறினார்.
112 வயதில் 8வது கல்யாணத்துக்குக் காத்திருக்கும் மலேசிய மூதாட்டி!