பச்சிளம் குழந்தைக்கு ஸ்க்ரூ, பேட்டரி, நெயில் பாலிஷ் ஊட்டி சாகடித்த கொடூர பெண்!
பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் வயிற்றில் பொத்தான் வடிவ பேட்டரிகள், உலோக திருகு போன்றவை எடுக்கப்பட்டுள்ளன. அவை குழந்தை இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே உட்கொள்ளப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் தெரிந்தது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு பெண், தனது பாய் ப்ரெண்டின் குழந்தைக்கு பேட்டரிகள், திருகுகள் மற்றும் நெயில் பாலிஷ் ரிமூவர் ஆகியவற்றை ஊட்டி விஷம் கொடுத்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் குழந்தை ஐரிஸ் ரீட்டா அல்ஃபெராவைக் கொன்றதற்காக அலீசியா ஓவன்ஸ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையின் ரத்தத்தில் உள்ள அசிட்டோனின் அளவு அபாயகரமான அளவுக்கு அதிகரித்தது தான் மரணத்துக்குக் காரணமாக இருந்தது என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து அலீசியா கைது செய்யப்பட்டார். 20 வயதான அலீசியா குழந்தையைக் கொல்வதற்கு முன் எப்படி கொல்லலாம் என்று ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது என பென்சில்வேனியாவின் அட்டர்னி ஜெனரல் மைக்கேல் ஹென்றி கூறுகிறார்.
“இந்த வழக்கு மனதைக் கனக்க வைக்கிறது. குழந்தையைக் கொல்வதற்காக யாராவது வேண்டுமென்றே இப்படிச் செய்வார்கள் என்பதை நம்புவது கடினம். ஆனால் விசாரணையில் அவர் குழந்தையைக் கொல்வதற்காக பல மாதங்களாக நுணுக்கமான ஆராய்ச்சியை மேற்கொண்டார் என்று தெரிந்தது" எனவும் அட்டர்னி ஜெனரல் ஹென்றி தெரிவிக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்துக்குள் 4ஜி சேவை கிடைக்கும்: பிஎஸ்என்எல் அறிவிப்பு
ஜூன் 25, 2023 அன்று, 20 வயதான அலீசியா குழந்தை ஐரிஸின் தந்தை பெய்லி ஜேக்கபியுடன் இருந்தார். அவர் கடைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து, தனது மகளுக்கு ஏதோ ஆகிவிட்டதாக ஓவன்ஸிடமிருந்து அலீசியாவிடமிருந்து போன் வந்தது.
விரைந்து வீட்டுக்குச் சென்று பார்த்த பெய்லி ஜேக்கப் தனது குழந்தை பேச்சுமூச்சற்று கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறந்த 18 மாதங்களே ஆன குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு மணிநேரத்தில், மேல் சிகிச்சைக்காக பிட்ஸ்பெர்க்கில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, துரதிர்ஷ்டவசமாக குழந்தை ஐரிஸ் இறந்துவிட்டது. ஐரிஸ் தனது தாயார் எமிலி அல்ஃபெரா மற்றும் அவரது தாத்தா பாட்டிகளுடன் வசித்து வந்ததாகவும் தந்தை ஜேக்கபி அவ்வப்போது வந்து குழந்தையைப் பார்த்துச் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
படுக்கையில் இருந்து விழுந்ததால் குழந்தைக்கு தலையில் அடிபட்டுவிட்டதாக அலீசியா போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் வயிற்றில் பொத்தான் வடிவ பேட்டரிகள், உலோக திருகு போன்றவை எடுக்கப்பட்டுள்ளன. அவை குழந்தை இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே உட்கொள்ளப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் தெரிந்தது.
சந்தேகத்தின் பேரில் அலீசியாவிடம் விசாரித்தபோது, அவர் குழந்தைக்கு நெயில் பாலிஷ் போன்ற நச்சுத்தன்மையுள்ள அழகுசாதனப் பொருட்களை ஊட்டியிருக்கிறார் என்றும் போலீசார் கண்டறிந்தனர்.
டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்குப் புதிய கட்டுப்பாடு! வாகனங்களுக்கும் கெடுபிடி!