Asianet News TamilAsianet News Tamil

கூடங்குளம் போராட்டத்தில் வெளிநாட்டு நிதி..! ஆளுநர் ரவிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய சுப.உதயகுமார்

கூடங்குளம் போராட்டத்தின் பின்னனியில் இருப்பவர்களுக்கு  வெளிநாட்டில் இருந்து நிதி வந்ததாக ஆளுநர் ரவிய கூறியிருந்த நிலையில், உண்மைக்குப் புறம்பான ஆளுநரின் பேச்சு எதிர்ப்பு தெரிவித்து  சுப.உதயகுமார். அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பினார் 

Udayakumar has sent a defamation notice to Governor Ravi for giving false information regarding the Kudankulam protest
Author
First Published Apr 8, 2023, 6:45 PM IST | Last Updated Apr 8, 2023, 6:45 PM IST

தமிழக ஆளுநர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஏஎஸ் பயற்சி மாணவர்கள் மத்தியில் பேசும் போது, நாட்டில் காப்பர் தேவை முக்கியமாக உள்ள நிலையில், ஸ்டெர்லைட் போரட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்ததாக தெரிவித்திருந்தார். இதே போல அணுசக்தி திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாகவும் பேசியிருந்தார். இது தொடர்பாக கூடங்குளம் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், ஆளுநர் ரவிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்த அறிக்கையில், தென் தமிழ்நாட்டில் அணுசக்தி திட்டத்துக்கான வேலையைத் தொடங்கும் போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல், காலநிலை மாற்றத் தாக்கம், அணு உலை வெடிக்கலாம், மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் சொல்லி போராட்டங்கள் வெடித்தன. 

ஆளுநர் பதவி, அவசியமில்லாத பதவி.! ஆர்.என்.ரவி பேச்சுக்கு எதிராக போராட்டத்திற்கு தேதி குறித்த திமுக கூட்டணி

Udayakumar has sent a defamation notice to Governor Ravi for giving false information regarding the Kudankulam protest

யாரும் பசி பட்டினியோடு நீண்ட காலம் போராட முடியாது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் சிலருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் பெரிய அளவில்  நிதிவந்தது தெரிய வந்தது என ஆளுநர் பேசியிருந்ததாக அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்துள்ளார்.  இந்த தகவல்  முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கருத்து என்பதால் ஆளுநர் தனது பேச்சைத் திரும்பப் பெற வலியுறுத்தி அவருக்கு மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாயிலாக அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கூடங்குளம் அணுவுலைக்கெதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார். வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள அந்த  நோட்டீசில்,

Udayakumar has sent a defamation notice to Governor Ravi for giving false information regarding the Kudankulam protest

கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதாக தாங்கள் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. எனது கட்சிக்காரரின் மரியாதைக்கு ஊறு விளைவிக்கவே தவறான தகவலை பேசியுள்ளீர்கள். உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்குப் புறம்பானது என்பதால் அது அவதூறின்கீழ்  வருகிறது. தமிழ்நாட்டின் ஆளுநர் எனும் முறையில் கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், அணுவுலைக்கு எதிராக போராடிய மக்களுக்கு எதிராக நீங்கள் தெரிவித்த தவறான கருத்துக்களை உடனடியாகத் திருத்த வேண்டும் இல்லையெனில் சட்டத் தீர்வுகளை நாடுவோம் என அந்த நோட்டீஸ் இடம்பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்

நிலக்கரி சுரங்க அறிவிப்பில் இருந்து பின்வாங்கிய மத்திய அரசு..! நாங்கள் தான் காரணம் என மார் தட்டும் இபிஎஸ்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios