Two people were killed when a government van hit a van on a speeding bus 12 people injured ...
விருதுநகரில் அரசு பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிய வேன் அசுர வேகத்தில் மோதியதில் பேருந்து ஓட்டுநர் உள்பட இருவர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனயில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நெல்லையில் இருந்து மதுரை நோக்கி அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று நேற்று காலை விருதுநகர் - மதுரை சாலையில் சத்திரரெட்டியபட்டி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தது.
இந்த பேருந்துக்கு பின்னால் கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு அரசு பேருந்து வந்தது. எதிரே மதுரையில் இருந்து விருதுநகருக்கு ஒரு வேன் வந்து கொண்டிருந்தது.
திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரைத் தாண்டி, நெல்லை - மதுரை பேருந்து மீது அசுரத்தனமாக மோதியது. அப்போது பின்னால் வந்துக் கொண்டிருந்த கோவில்பட்டி - மதுரை பேருந்தும் முன்னால் சென்றுக் கொண்டிருந்த பேருந்து மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சேர்ந்த பாப்பாத்தி (22) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பேருந்தை ஓட்டி வந்த நெல்லையைச் சேர்ந்த ஓட்டுநர் மணி (50) என்பவரும் படுகாயத்துடன் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில், கோவில்பட்டியைச் சேர்ந்த கவிதா (22), செல்வபாரதி (8 மாத குழந்தை), கண்ணன் (50) ஆகிய மூவரும், ஆதிராம் (29) விருதுநகர் மாத்திநாயக்கன்பட்டி, தெய்வபிரபு (50) முல்லைநகர் - கோவில்பட்டி, மாரியப்பன் (30), முருகன் (50) மாத்திநாயக்கன்பட்டி -விருதுநகர், பிரபாகரன் (56) வடசேரி - நாகர்கோவில், பாலமுருகன் (45) சாத்தூர், மோகன்குமார் (54), பேருந்து நடத்துநர் அம்பலவாணபுரம் நெல்லை மாவட்டம்., வேன் ஓட்டுநர் சிலம்பரசன், அவருடன் இருந்த ஆறுமுகம் ஆகிய 12 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனயில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து பாண்டியன்நகர் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
