அதிரடி திருப்பம்.! காங். மாவட்ட தலைவர் எழுதிய மேலும் 2 கடிதம் சிக்கியது- என்ன எழுதி இருக்கார் தெரியுமா.?

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இறப்பதற்கு முன்பாக ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

Two more letters written by Tirunelveli Congress district president Jayakumar who died mysteriously, have been found kak

மர்ம மரணம்- சிக்கிய கடிதம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 2 நாட்களாக காணவில்லையென காவல்நிலையத்தில் அவரது மகன் நேற்று புகார் செய்திருந்தார். மேலும் ஜெயக்குமார் தன்சிங் மாவட்ட எஸ்பிக்கு எழுதிய கடிதத்தையும் புகாரோடு சேர்த்து வழங்கியுள்ளார். அதில்  சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் தலைவர் தங்கபாலு மற்றும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல் தமிழக அரசியல் வட்டாரமே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில்  போலீசார் ஜெயக்குமாரை தேடி வந்த நிலையில், ஜெயக்குமாரின் தோட்டத்தில் ஒருவர் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

Two more letters written by Tirunelveli Congress district president Jayakumar who died mysteriously, have been found kak

பணம் கொடுக்கல்... வாங்கல்...

இதனையடுத்து போலீசார் இறந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறுதியாக இந்த உடல் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் என தெரியவந்தது. எனவே ஜெயக்குமார் மரணசம் கொலையா.? தற்கொலையா என போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஜெயக்குமார் எழுதியதாக மேலும் இரண்டு கடிதம் கிடைத்துள்ளது. அதில் தனது மருமகன் ஜெயபாலுக்கு எழுதிய கடிதத்தில், தனக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான பணம் தொடர்பாக 14 பேர் கொண்ட பட்டியலை  குறிப்பிட்டுள்ள ஜெயக்குமார், தான் திருப்பி அளிக்க வேண்டிய பண விவரங்களையும் ஜெயக்குமார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Two more letters written by Tirunelveli Congress district president Jayakumar who died mysteriously, have been found kak

யாரும் பழி வாங்க வேண்டாம்

மேலும் இடிந்தக்கரையை சேர்ந்த ஒருவருக்கு  ரூ.10 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும்,நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனிடம் ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு, காசோலையை திரும்பப் பெற வேண்டும் தெரிவித்துள்ளார். அந்த கடிததத்தில், தனது சொத்து தொடர்பான தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் மற்றொரு கடிதத்தில், மகள் கத்ரீன் திருமணத்தை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி என உருக்கமாக குறிப்பிட்டவர், தனது பிரச்சினையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம், சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் கேட்டுக்கொட்டுள்ளார். எனவே நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் இறந்தது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Jayakumar Death: ஜெயக்குமாரின் மர்ம மரணத்தில் எனக்கு தொடர்பா? MLA ரூபி மனோகரன் பரபரப்பு விளக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios