Two fine guards in the helmet in Chennai were fined

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 காவலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஹெல்மெட் அணிவது, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது போன்ற போக்குவரத்து விதிகளை போலீஸார் உட்பட அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இரு சக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் போட்டுக்கொள்ள வேண்டும், ஒரிஜினல் லைசென்ஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட போக்குவரத்து விதிககளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என தமிழக போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால் சில போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் இருந்து எப்படி பணத்தை கரப்பது என்பதிலேயே குறியாகவும் உள்ளனர். 

சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் வைத்திருந்தும் அணியாமல் வந்ததிற்காக 100 ஃபைன் போட்டதோடு பால் வண்டியில் வரும் போது ஹெல்மெட் அணியவில்லை என பில்லும் கொடுத்த கதை தமிழ்நாடு சென்னையில் அரங்கேறியுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 காவலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி 120 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.