சென்னை பரங்கிமலையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர். 

தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் ரயில் மோதி பலி

சென்னை பரங்கிமலையில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் முகமது நபில், சபீர் அகமது ஆகியோர் சென்னையில் தங்கி டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.. இந்த நிலையில் இன்று காலை மின்சார ரயிலில் பயணம் செய்ய பரங்கிமலை ரயில் நிலையம் வந்த நிலையில் இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர்.

மாணவர்கள் ரயில் மோதி பலி

அப்போது சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியதில் மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மாணவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ரயில் மோதி ஒரே ஊரை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது கவனமோடும், பாதுகாப்போடும் கடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக செல்போன் பேசிக்கொண்டே ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது ரயில் வருவது தெரியாமல் விபத்து நடைபெறுவது அடிக்கடி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.