- Home
- Tamil Nadu News
- சென்னை
- EMU AC Train Chennai - Chengalpattu: சென்னை மக்களுக்கு இன்று முதல் குளுகுளு ஏசி ரயில்கள்!
EMU AC Train Chennai - Chengalpattu: சென்னை மக்களுக்கு இன்று முதல் குளுகுளு ஏசி ரயில்கள்!
AC EMU train service: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மின்சார ரயில்களில் தற்போது ஏசி வசதியுடன் கூடிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

EMU AC Train Chennai - Chengalpattu:சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் 5 ரூபாய் டிக்கெட்டில் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய முடியும். இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையும், சென்னை சென்ட்ரலிருந்து மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம் வரையும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என லட்சகக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக சொல்ல போனால் சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.
AC EMU train
EMU AC Train Chennai - Chengalpattu ரயில் சோதனை ஓட்டம்
ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மின்சார ரயில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. AC EMU train service
இதையும் படிங்க: DEMU மற்றும் MEMU ரயில்களுக்கு இடையிலான வேறுபாடு என்ன?
Chennai AC EMU train
சென்னையில் முதன்முறையாக EMU AC Train Chennai - Chengalpattu
இந்நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் குளு குளுவென ஏசி பெட்டியில் செல்ல பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம் விவரம்
சென்னை கோட்டை, சென்னை பார்க், எழும்பூர் ரூ.35, மாம்பலம் ரூ.40, கிண்டி, பரங்கிமலை, திரிசூலம் ரூ.60, தாம்பரம், பெருங்களத்தூர் ரூ.85, கூடுவாஞ்சேரி, பொத்தேரி ரூ.90, சிங்கபெருமாள்கோயில் ரூ.100, பரனூர், செங்கல்பட்டு ரூ.105 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
AC EMU train fares
EMU AC Train Chennai - Chengalpattu கால அட்டவணை
சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணி, பிற்பகல் 3.45, இரவு 7.35 மணிக்கு ஏசி ரயில் செங்கல்பட்டிற்கு இயக்கப்படுகிறது. அதேபோல் செங்கல்பட்டி இருந்து காலை 9, மாலை 5.45, தாம்பரத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு சென்னை கடற்கரைக்கு ஏசி ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.