ஓசியில் ரோஸ்மில்க் கேட்டோ.. தாமதமானதாலோ ஓட்டல் மேலாளரை அடிக்கவில்லை.. சரணடைந்தவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை அண்ணாநகரில் ரோஸ்மில்க் கடை மேலாளரை தாக்கிய வழக்கில் அந்த கடையின் முன்னாள் ஊழியர் உட்பட இரண்டு பேர் காவல்நிலையத்தில் சரண்டைந்துள்ளனர். கடை மேலாளரை தாக்கியது ஏன் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் கோர காம்ப்ளக்ஸ் பகுதியில் பல்வேறு உணவு விடுதிகள் இயங்கி வருகிறது. இங்கு நள்ளிரவு நேரத்திலும் அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும் என் காரணமாக தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு ஏராளமான இங்கு நள்ளிரவில் உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள். இந்த நிலையில் கடந்த தீபாவளி தினத்தன்று இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் அங்குள்ள ரோஸ் மில்க் கடைக்கு வந்து ஆர்டர் செய்துள்ளனர். அப்போது கடை ஊழியர்களுக்கும் கடையின் வாடிக்கையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கடையின் மேலாளராக இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கணேசன் என்பவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும் கூறி இருந்தனர். இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ரோஸ் மில்க் கடையில் பணிபுரிந்த கொரட்டூர் பகுதி சேர்ந்த முன்னாள் ஊழிய ஜெட்சன் மற்றும் அவர் நண்பர்கள் தான் கணேசனை தாக்கியது தெரிய வந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அந்த இரண்டு பேரும் போலீசில் சரணடைந்துள்ளனர் இதனை அடுத்து அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில்,
நண்பர்களோடு தீபாவளி தினத்தில் கோரா உணவகத்திற்கு வந்ததாகவும்,